குஜராத்: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், குஜராத்தின் கவ்டாவில் ஒரு பெரிய எரிசக்தி ஆலையை உருவாக்கி வருகிறது. இதன் பரப்பளவு சுமார் 538 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த பணியானது முடிந்ததும், எந்த வகையான ஆற்றலைப் பயன்படுத்தினாலும் சரி, இது உலகின் மிகப்பெரிய அளவிலான மின் உற்பத்தி நிலையமாக இருக்கும்.
கவ்டா எரிசக்தி ஆலைத் திட்டத்தின் கட்டுமானம், 2022 டிசம்பரில் தொடங்கியது, முதல் எனர்ஜி உற்பத்தி டிசம்பர் 31, 2023 அன்று செய்யப்பட்டது. அதானி குழுமம் 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உற்பத்தியில் சுமார் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது பாரீஸ் நகரை விட 5 மடங்கு பெரிய திட்டம்.

கவ்டாவில் உள்ள திட்டம் ஒரு சிறப்பு வகை ரெனிவபில் எனர்ஜி கிளஸ்டர் ஆகும். அதாவது இதன் ஆற்றல் மூலங்கள் என்றும் தீர்ந்து போகாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, சோலார் எனெர்ஜியை சொல்லாம். காலையில், சூரிய சக்தியை உருவாக்குகிறது, மாலையில் அது காற்றாலை ஆற்றலை உற்பத்தி செய்கிறது. தற்போது, 2,000 மெகாவாட் சூரிய சக்தியை உற்பத்தி செய்து வருகிறது.
அதன் இலக்கை அடைய நிறுவனம் பின்பற்றும் காலக்கெடு குறித்து கேட்டபோது, அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் இயக்குனரான வினீத் ஜெயின், தற்போது கவ்டா திட்ட தளத்தில், 2 ஜிகாவாட் மின் உற்பத்தி நிறைவடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டான 2024-25க்கான எங்களின் இலக்கு, மேலும் 4 ஜிகாவாட்களை சேர்த்து, மார்ச் 2025 க்குள் மொத்தம் 6 ஜிகாவாட்களை உருவாக்குவது. அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 5 ஜிகாவாட் வரை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
தற்போது, கவ்டா திட்டத்தில், அவர்கள் 30 காற்றாலைகள் நிறுவியுள்ளனர், மேலும் 50 காற்றாலை அமைப்பதற்கான அடித்தளம் அமைத்துள்ளனர். அவர்கள் 4 மில்லியன் சோலார் பேனல்களையும் நிறுவியுள்ளனர். 2029ஆம் ஆண்டுக்குள் 75 மில்லியன் சோலார் பேனல்களை நிறுவி 2030ஆம் ஆண்டுக்குள் 45,000 மெகாவாட்களை உற்பத்தி செய்வதே அவர்களின் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா வளர்ந்து வரும் நேரத்தில், சூரிய மற்றும் காற்று போன்ற எரிசக்தி ஆதாரங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவு விதிவிலக்கானது என்று ஜெயின் குறிப்பிட்டார். அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், ரெனிவபில் எரிசக்தி ஆதாரங்களின் அடிப்படையில் இந்தியா நிறைவு அடைய முடியும் என்றும் அவர் கூறினார் .
கவ்டா திட்ட தளத்தில், தூசி குவிவதை சுத்தம் செய்ய அனைத்து சோலார் பேனல்களுக்கும் நீரற்ற சுத்தம் செய்யும் ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர், இது ஆற்றல் வெளியீட்டை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வறண்ட கட்ச் பகுதியில் இருப்பதால் தண்ணீரை சேமிக்கிறது.
இந்தத் திட்டம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் சுமார் 58 மில்லியன் டன் CO2 வெளியேற்றதைத் தவிர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 12 மாநிலங்களில் பரவியுள்ளது, ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பெரிய உற்பத்தி ஆலைகள் உள்ளது. இறுதியில் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும், அதற்கான உறுதியான திட்டம் எதுவும் இல்லை என்று வினீத் ஜெயின் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications