அமெரிக்கா: கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் சில சாதனைகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும். ஆனால் இந்த சாதனை குடிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும். உலகின் மிகப்பெரிய வோட்கா பாட்டில் 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
கின்னஸ் சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த வோட்கா பாட்டில் 7 அடி உயரம் கொண்டது. இதனை ஏயு வோட்கா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வடிவமைத்தனர். தங்க முலாம் பூசப்பட்ட வோட்கா பாட்டில் 7 அடி உயரத்தில் பார்ப்பதற்கு ஸ்டன்னிங்காக உள்ளது. அது மட்டுமல்ல , இந்த பாட்டிலில் வோட்காவையும் நிரப்பியுள்ளனர்.

இந்த வோட்கா பாட்டிலுக்குள் 259 லிட்டர் அளவிற்கு பிரீமியம் தரத்திலான வோட்கா நிரப்பப்பட்டு உள்ளதாம். இதனை கின்னஸ் உலக சாதனை புத்தகம் ஒரு சாதனையாக அங்கீகரித்துள்ளது. புதுமையை புகுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் வோட்கா பிரியர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த ஏழடி உயர வோட்கா பாட்டிலே வடிவமைத்ததாக , இதனை வடிவமைத்தவர்களுள் ஒருவரான சார்லி மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு சாப்பின் நிறுவனத்தின் வோட்கா பாட்டில்தான் மிகப்பெரிய பாட்டில் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருந்தது. அதாவது இதில் 200 லிட்டர் வோட்கா வைக்கப்பட்டிருந்தது. புதிதாக கின்னஸில் இடம் பிடித்துள்ள இந்த பாட்டிலில் 259 லிட்டர் வோட்கா நிரப்பப்பட்டுள்ளது. இதனை வாங்குபவர் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு தினம் தோறும் ஒவ்வொரு ஷாட்டாக வோட்கா அருந்த முடியுமாம்.
இந்த வோட்கா பாட்டிலை வாங்குவதற்கு சர்வதேச அளவில் பல்வேறு பிரபலங்களும் போட்டியிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் வரலாற்றில் இடம் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் பலரும் இதனை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு கூட தயாராக இருக்கிறார்களாம். தற்போதைக்கு இதன் மதிப்பு1.50 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் அங்கீகரித்த ரிச்சர்ட் ட்ரைனிங் என்பவர் இது மிகப்பெரிய சாதனை தான். இதில் 259 லிட்டர் வோட்கா இருக்கிறது, அதிகமாக இருக்கிறது என குடித்து உடமை கெடுத்து கொள்ள கூடாது. இதனை வாங்குபவர்கள் தங்களது உடல் நிலையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications