உலகில் தொடங்கப்பட்ட பல கம்பெனிகள் சில பல ஆண்டுகளுக்குள்ளேயே மூடுவிழாக்களை சந்தித்து விடுகின்றன. தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் தான் இதுபோன்று ஆகிவிடுகின்றது. இருப்பினும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து நிலைக்கும் நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
அப்படியொரு கம்பெனி கோங்கோ குமி கோ லிமிடெட். (Kongō Gumi Co.) இது ஒரு ஜப்பானிய கட்டுமான கம்பெனியாகும். கிமு 578 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தான் உலகிலேயே மிகவும் புராதான கம்பெனியாகும். கோங்கோ குமி கோ ஜப்பான் நாட்டின் ஓசாகா நகரத்தில் இயங்கி வருகிறது.

சந்தையில் இத்தனை ஆண்டு காலம் தாக்குப்பிடித்தது எப்படி என்ற ரகசியத்தை அந்தக் கம்பெனி இப்போது வெளியிட்டுள்ளது. உலகின் மிகப் பழைய கம்பெனியாக இருந்து வந்த கோங்கோ குமி கோ பெருகி வரும் தொழில் போட்டிக் காரணமாக 2006ஆம் ஆண்டில் டாகாமாட்சு கன்ஸ்ட்ரக்ஷன் குரூப்பின் துணை நிறுவனமாக மாறியது.
பாரம்பரிய கட்டடக்கலையில் நிபுணத்துவம் கொண்டது கோங்கோ குமி. முக்கியமாக டிசைன், கன்ஸ்ட்ரக்ஷன், சீரமைப்பு, ஆலயங்களை செப்பனிடுதல், கோயில்கள், மாளிகைகள், கலாசார சிறப்புமிகு கட்டடங்கள் தொடர்பான கட்டுமானப் பணிகளை இந்த நிறுவனம் செய்து வந்தது.
ஒரு துணை நிறுவனமாக இப்போது மாறிவிட்டாலும் தொடர்ந்து பழங்கால முறைகளையே பின்பற்றி வருகிறது. குறிப்பாக பௌத்த கோயில்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டங்களையும் செப்பனிடுவதில் மும்முரமாக உள்ளது.
ஒஸாகாவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1400 வருடங்களாக ஒரு குடும்பத்தினரால் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஜப்பானில் காங்கிரீட்டையும் மரத்தையும் சேர்த்துப் பயன்படுத்தி ஆலயங்களைக் கட்டிவரும் முதல் கட்டுமானங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு வெறும் பயிற்சியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். இந்தப் பயிற்சிக் காலத்தில் யார் சிறப்பான வேலை நுணுக்கங்களை வெளிப்படுத்துகின்றனர் என்பதை அறிய ஒருவருக்கொருவர் இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் களிமண்ணையும் மரத்தையும் சேர்த்து ஆலயக் கட்டுமானத்தை செய்பவர்களும் கண்டறியப்படுகின்றனர்.
இந்த அயராத பயிற்சிதான் கோங்கோ கோ நிறுவனத்தை இத்தனைக் காலம் கட்டுமானத் தொழிலில் தாக்குப் பிடிக்க வைத்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications