வீடோ அல்லது நாடோ எதுவாக இருந்தாலும் வருமானம் இல்லாமல் செயல்பட முடியாது. தனிநபர்கள் வருமானம் மூலம் குடும்பங்கள் நடக்கின்றன. அதேசமயம் வரி விதிப்பின் மூலம் அரசு வருமானம் ஈட்டுகிறது.
வருமான வரி, சாலை வரி, ஜி.எஸ்.டி., வாட் வரி போன்ற வரிகளைதான் நாம கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் ஒரு காலத்தில் சில நாடுகளில் வித்தியாசமான மற்றும் ஆச்சரியம் அளிக்கும் வரிகள் இருந்தன. அப்படி அந்த வித்தியாசமான சில வரிகளை நாம் பார்ப்போம்.

1.ஜன்னல் வரி : இங்கிலாந்தில் 1696ல் அப்போது மன்னராக இருந்த 3ம் வில்லியம் இந்த வரியை அறிமுகம் செய்தார். வீடுகளில் உள்ள ஜன்னல்களின் அடிப்படையில் வரி விதிக்கப்பட்டது. வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட ஜன்னல்கள் இருந்தால் அதிகபட்சமாக பத்து வெள்ளி செலுத்த வேண்டும்.
இதனால் வரியை குறைக்கும் நோக்கில் வீட்டு உரிமையாளர்கள் ஜன்னல்களை செங்கல்களால் அடைத்தனர். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டது. 156 ஆண்டுகளாக இந்த வரி அமலில் இருந்தது. சுகாதாரத்தின் மீதான வரி, ஒளி மற்றும் காற்று மீதான வரி என கடும் எதிர்ப்பு கிளம்பியதால் 1851ல் இந்த வரி ரத்து செய்யப்பட்டது.
2.பேச்சலர் வரி : திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு பேச்சலர் வரி விதிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் உள்ள மிசோரியா மாநிலத்தில் விதிக்கப்படுகிறது. 21 முதல் 50 வயது வரையிலான திருமணமாகாத ஆண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1 டாலர் விதிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா மற்றும் இத்தாலி உள்பட பல நாடுகளிலும் விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது பல நாடுகளில் இது ரத்து செய்யப்பட்டுள்ளது.
3.ப்ளூபெர்ரி வரி : அமெரிக்காவில் மைன் மாநிலத்தில் ப்ளூபெர்ரி பழங்கள் உற்பத்தி முக்கிய விவசாய தொழிலாக விளங்குகிறது. அதிகப்படியான உற்பத்தியால் விலை குறைந்து ப்ளூபெர்ரி தொழில் கடுமையாக பாதித்தது. இதனையடுத்து இந்த தொழிலை பாதுகாக்கும் நோக்கில் அதிகளவில் ப்ளூபெர்ரி சாகுபடியை செய்வதை தடுக்கும் வகையில் ப்ளூபெர்ரி வரி விதிக்கப்படுகிறது. அந்த மாநிலத்தில் ப்ளூபெர்ரி பழங்கள் உற்பத்திக்கு ஒரு பவுண்டுக்கு ஒன்றரை சென்ட் வரி விதிக்கப்படுகிறது.
4.ஐஸ் பிளாக் வரி : அமெரிக்காவில் உள்ள அரிசோனாவில் மொத்தமாக ஐஸ் கட்டிகள் வாங்குவதற்கு ஐஸ் பிளாக் வரி விதிக்கிறது. ஆனால் ஐஸ் க்யூப்ஸ் வாங்குவதற்கு வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் ஒரு வேளை அந்த பக்கம் போனீங்க என்றால், ஐஸ் கட்டிகள் வாங்குவதற்கு பதில் ஐஸ் க்யூப்ஸ் வாங்குங்க வரிக்காக காசு செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
5.ஜாக் வரி : அமெரிக்காவில் கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஒரு தொழில்முறை விளையாட்டு வீரரின் வருமானத்தில் ஜாக் வரி விதிக்கப்படுகிறது. ஒரு தொழில்முறை விளையாட்டு வீரர் சொந்த நகரம் அல்லது மாநிலத்தை தவிர்த்து வேறு நகரம் அல்லது மாநிலத்தில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கின்றன. ஆக விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சி மற்றும் பயிற்சி அமர்வுகளில் கவனம் செலுத்துவது போல் தங்கள் வரிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
6.பூசணி வரி : பூசணிக்காய் என்ற வார்த்தையை கேட்டவுடன் ஹாலோவீன் பண்டிகை நினைவுக்கு வரும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அக்டோபர் 31ம் தேதியை பேய்களை சந்தோஷப்படுத்தும் நாளாக ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் பூசணிக்காய் வரிவிலக்கு அளிக்கும் உணவாக இருந்தாலும், அதில் வண்ணம் பூசினாலோ, வார்னிஷ் செய்தாலோ அல்லது வெட்டி அலங்காரமாக விற்பனை செய்தால் அதற்கு விற்பனை வரி பொருந்தும்.
7.டாட்டூ வரி : மக்கள் தங்கள் கருத்துகள், நம்பிக்கைகள் போன்றவற்றை வெளிப்படுத்த உடம்பில் டாட்டூ போடுகிறார்கள். பல நாடுகளில் பச்சை குத்துதல் (டாட்டூ) நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் 2002ம் ஆண்டு முதல் பல்வேறு டாட்டூ ஸ்டுடியோக்கள் மற்றும் பார்லர்கள் வழங்கும் சேவைகளுக்கு 6 சதவீதம் விற்பனை வரி விதிக்கப்படுகிறது.
8.தொப்பி வரி : பிரிட்டிஷ் அரசாங்கத்தால் 1784-1811 கால கட்டத்தில் ஆண்களின் தொப்பிகளுக்கு வரி விதிக்கும் வழக்கம் இருந்தது. விலையுயர்ந்த தொப்பிகளை வைத்திருக்கும் ஒரு மனிதன் மிகவும் பணக்காரன் என்ற கருத்தின் அடிப்படையில் இது ஒரு மலிவான தொப்பி அல்லது ஒன்றுமே இல்லாத ஒரு ஏழை மனிதனுடன் ஒப்பிடப்பட்டது. ஒரு நபரின் செல்வத்தின் அடிப்படையில் வருவாய் பெறுவதே தொப்பி வரியின் நோக்கமாக இருந்தது.
9.டாய்லெட் ப்ளஷ் வரி : தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், அமெரிக்காவில் மேரிலாண்ட் மாகாணத்தில் டாய்லெட் ப்ளஷ்ங்கிற்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாதத்துக்கு 5 டாலர் வரி விதிக்கப்படுகிறது. டாய்லெட் ப்ளஷ் வரி மூலம் கிடைக்கும் பணம் மேரிலாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு அபை்பின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
10.கோழை வரி : 10ம் நூற்றாண்டில் போர்களுக்கு பணம் திரட்ட மன்னர்கள், கோழைத்தனம் அல்லது பயம் காரணமாக போர் வேண்டாம் என்று தேர்வு செய்யும் மக்கள் மீது கோழைத்தனம் வரி விதித்தனர். இந்த வரி முதலில் முதலாம் ஹென்றி அரசரால் விதிக்கப்பட்டது. இது முதலில் குறைவாக இருந்தது. ஆனால் பின்னர் கிங் ஜான் வரி விகிதத்தை 300 சதவீதம் அதிகரித்தார்.
11.செல்லப்பிராணிகள் வரி : 2017ம் ஆண்டின் இறுதியில் பஞ்சாப் அரசாங்கம் வெவ்வேறு வீட்டு விலங்குகளின் உரிமையாளர்களுக்கு வரி விதிப்பதாக அறிவித்தது. இரண்டு விதமான வரிகளை விதித்தது. அதன்படி, நாய்கள், பூனைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் மற்றும் மான்களின் உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.250 வசூலிக்கப்படும். அடுத்து யானைகள், பசுக்கள்,ஒட்டகங்கள், குதிரைகள், எருமைகள் மற்றும் காளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.500 வரியாக வசூலிக்கப்படும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications