1330024000000000 கோடி சொத்து.. உலகின் மகா பணக்கார பெண்மணி பேரரசி வூ..!

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் என்றால் உடனடியாக ஞாபகத்துக்கு வருவது எலான் மஸ்க், லூயிஸ் வுய்ட்டன் அதிபர் அர்னால்டு பெர்னால்ட், அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ், இந்தியாவின் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானி ஆகியோர் பெயர்கள்தான்.

ஆனால் இவர்கள் அனைவரது சொத்துக்களையும் சேர்த்தாலும் அதைவிட அதிக பணத்தை வைத்துள்ள பெண்மணி தான் சீனாவை சேர்ந்த பேரரசி வூ.

1330024000000000 கோடி சொத்து.. உலகின் மகா பணக்கார பெண்மணி பேரரசி வூ..!

பேரரசி வூ அவர் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாக விளங்கினார். சில வரலாற்று ஆசிரியர்களோ இதுவரை உலகில் வாழ்ந்த பெண்களில் இவர்தான் மிகப் பெரிய பணக்காரர் என்கின்றனர்.

அவரது நிகர சொத்து மதிப்பு நினைத்தால் மலைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இருந்துள்ளது. சுமார் 16 டிரில்லியன்களாம். இந்திய மதிப்பில் 1,33,00,24,00,00,00,000 கோடி ஆகும். எலான் மஸ்க், முகேஷ் அம்பானி, ஜெப் பேசோஸ், அதானி உள்ளிட்டவர்களின் சொத்துகளை சேர்த்தாலும் அதனைக் காட்டிலும் பெரிதாகும்.

1330024000000000 கோடி சொத்து.. உலகின் மகா பணக்கார பெண்மணி பேரரசி வூ..!

இந்த எண்ணைப் பார்த்தாலே கண்ணைக் கட்டுது. எழுத்தால் படித்தால் மண்டை கிறுகிறுத்துவிடும் போல. ஆமாம். பதிமூன்று லட்சத்து முப்பதாயிரத்து 24 கோடி கோடி! லேசா தலைசுத்துதுல...

டாங்க் சாம்ராஜ்ஜியத்தை சேர்ந்த பேரரசி வூவின் சொத்தானது எலான் மஸ்க்கின் 229 பில்லியன் டாலர்கள், ஜெப் பேசோஸின் 174 பில்லியன், முகேஷ் அம்பானியின் 106.2 பில்லியன் ஆகியவற்றை சேர்த்தாலும் அதைவிட அதிகமாக வருகிறது.

1330024000000000 கோடி சொத்து.. உலகின் மகா பணக்கார பெண்மணி பேரரசி வூ..!

பேரரசி வூ தனது அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு திறம்பட இருந்ததாக வரலாற்று நிபுணர்கள் வருணிக்கின்றனர். தனது நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்கா சொந்த பிள்ளைகளையே பேரரசி வூ கொன்று குவித்ததாகவும் கூறப்படுகிறது.

15 ஆண்டுகாலம் பேரரசி வூ ஆட்சி செய்துள்ளார். அப்போது அவரது சீனப் பேரரசு மத்திய ஆசியா வரை விரிவடைந்துள்ளது. தேயிலை, பட்டு வர்த்தகத்தின் மூலமாக அவரது ஆட்சிக்காலத்தில் சீன பொருளாதாரம் செழித்து விளங்கியுள்ளது.

1330024000000000 கோடி சொத்து.. உலகின் மகா பணக்கார பெண்மணி பேரரசி வூ..!

பேரரசி வூவின் ஆடம்பரமான செல்வச் செழிப்பான அரண்மனை வாழ்க்கை பற்றி பல்வேறு திரைப்படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரபல சீன நடிகை ஃபான் பிங்பிங் நடித்த எம்பரஸ் ஆப் சைனா என்ற டிவி சீரியல் மிகவும் பிரபலமானது.

சீன வரலாற்றில் முதல் மற்றும் ஒரே பெண் பேரரசியாக 665 கிபி முதல் 705 கிபிவரை டாங் வம்சத்தின் ஆட்சியாளராக இருந்துள்ளார். அவர் டாங் வம்சத்தின் முதல் பேரரசியாக இருந்தார்.

அவரது அசாதாரணமான புத்திசாலித்தனம், அரசியலில் கூர்மையான திறன் மற்றும் அதீத லட்சியம் ஆகியவற்றுடன், அவர் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+