டொனால்டு டிரம்புக்கே செக் வைத்த கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் முடங்கி போன ஹோட்டல் வணிகம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில், ஹோட்டல் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

உலகெங்கிலும் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனாவால், மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் உலக பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

இதற்கிடையில் ஹோட்டல் வணிகம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் எந்த துறையெல்லாம் எவ்வளவு பாதிக்கக் கூடும் என்பதைத் தன் பார்க்க போகிறோம், வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்காவில் பாதிப்பு

அமெரிக்காவில் பாதிப்பு

அதிலும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை 54,881 பேர் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளனர். மேலும் 782 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த வணிகமும் ஸ்தம்பித்து போயுள்ளது எனலாம். மேலும் பல நாடுகளுக்கான விமான சேவையும் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் வணிகம்

ஹோட்டல் வணிகம்

முன்னரே நாம் உள்ளிட்ட பல கட்டுரைகளில் படித்திருக்கிறோம்.

பொருளாதாரத்தினை மேம்படுத்த போராட்டம்
 

பொருளாதாரத்தினை மேம்படுத்த போராட்டம்

உலகமெங்கிலும் பரவி வரும் கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்த பல நாடுகளும் போராடி வரும் நிலையில், அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது நாட்டினை பொருளாதார ரீதியாக வீழ்ச்சி காணுவது எப்படியாவது தடுத்தேயாக வேண்டும் என்ற நிலையில் டிரம்ப் போராடி வருகிறார்.

டிரம்புக்கு வந்த பிரச்சனை

டிரம்புக்கு வந்த பிரச்சனை

இது இப்படி எனில் டொனால்டு டிரம்புக்கு மற்றொரு பெரிய பிரச்சனையையும் எதிர் கொண்டு வருகிறார். ஒன்று அவரது கோல்ப் மைதானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த வணிகம், ஹோட்டல் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் தனது நாடு கண் முன்னே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், தனக்கு சொந்தமான வணிகமும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதையும் பார்த்து வருகிறார்.

இதெல்லாம் முடக்கம்

இதெல்லாம் முடக்கம்

அதிலும் டிரம்புக்கு சொந்தமான அமெரிக்கா மற்றும் கனடா ஹோட்டல்களில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள சொகுசான அறைகள் பெரும்பகுதி காலியாகவே உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள டிரம்பின் கோல்ப் மைதானங்கள் மூடப்பட வேண்டிய அழுத்தத்தில் உள்ளனவாம். மேலும் டிரம்புக்கு பிடித்தமான அவரது Southern White House இப்படி பல மூடப்பட்டுள்ளனவாம். இதனால் டிரப்பின் வணிகம் முற்றிலும் முடங்கி போயுள்ளது எனலாம்.

பணி நீக்கம் செய்யப் போகிறாரா?

பணி நீக்கம் செய்யப் போகிறாரா?

ஆக நாடெங்கிலும் உள்ள ஹோட்டல் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் பேர் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதே நிலையில் தான் தற்போது டிரம்பும் உள்ளார். மற்ற நிறுவனங்களை போல இவரும் பணி நீக்கம் செய்யப்போகிறாரா? ஏனெனில் ஏற்கனவே 2018ம் ஆண்டில் 435 பில்லியன் டாலர் வருவாய் வீழ்ச்சியை கண்டதாக கூறியுள்ள நிலையில், இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நிதி இழப்பு பற்றி கூறவில்லை

நிதி இழப்பு பற்றி கூறவில்லை

எனினும் டிரம்பும் சரி, அவரது வணிகத்தினை நிர்வகிக்கும் மகன்களே இதனால் ஏற்படும் நிதி இழப்பினை பற்றி ஏதும் விவரிக்கவில்லை. கடந்த சனிக்கிழமையன்று டிரம்ப் ஒர் அறிக்கையில் இது என்னை காயப்படுத்துகிறது. என்னை மட்டும் அல்ல உலகெங்கிலும் உள்ள அனைத்து ஹோட்டல் வணிக்கத்தினையும் பாதிக்கிறது என்று கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதெல்லாம் கிடையாது

இதெல்லாம் கிடையாது

மேலும் ஹோட்டல்கள் திறந்துள்ளன. ஆனால் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன, நீச்சல் குளங்கள், ஸ்பா மற்றும் பல வசதிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் தெருவில் பல உணவகங்கள் உள்ளன, அவற்றில் ஏதேனும் ஒன்றை பெற முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எப்படியோங்க மற்ற உரிமையாளர்களின் வணிகம் எப்படி பாதிக்கக்கூடும் என்பதை நிச்சயம் டிரம்ப் உணர்ந்திருப்பார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Worldwide hotel industry under pressure about coronavirus, including Trump’s Own Business

Worldwide Major hotel chains are temporarily closing properties and seeing occupancy rates tumble as travellers stay at home during the coronavirus pandemic. So they facing very critical stage of hotel business.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X