சம்பள கமிஷன் தள்ளி போனாலும் இந்த ஒரு நல்ல விஷயம் நடக்க போகுது!! அரசு ஊழியர்களே ரெடியா இருங்க!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் மாற்றி அமைக்கப்படுகிறது . சம்பள கமிஷனை அமைத்து விலைவாசி மக்களின் செலவுகள் உள்ளிட்டவை கணக்கீடு செய்யப்பட்டு அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தின் கட்டமைப்பும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய கட்டமைப்பும் மாற்றம் செய்யப்படும்.

சம்பள கமிஷன்: 10 ஆண்டு காலத்திற்கு சம்பள கமிஷன் நடைமுறையில் இருக்கும் ,இந்த 10 ஆண்டுகளிலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி என்பது வழங்கப்படும் . தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

சம்பள கமிஷன் தள்ளி போனாலும் இந்த ஒரு நல்ல விஷயம் நடக்க போகுது!! அரசு ஊழியர்களே ரெடியா இருங்க!!

தற்போதைய நிலை என்ன: 8ஆவது சம்பள கமிஷனை பொருத்தவரை கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புரைகளை தயாரிக்கும் பணிகள் , பல்வேறு மாநிலங்களிடம் கருத்து கேட்கும் பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. சம்பள கமிஷன் தலைவரையோ உறுப்பினரையோ நியமனம் செய்வதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

எப்போது நடைமுறை: சம்பள கமிஷன் பணிகள் தாமதமாவது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பள கமிஷனுக்கான உறுப்பினர் மற்றும் தலைவரை நியமனம் செய்து அந்த சம்பள கமிஷன் பல்வேறு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரை வழங்குவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் . கிட்டதட்ட 2027 ஆம் ஆண்டில் தான் இந்த கமிஷன் தன்னுடைய பரிந்துரையை வழங்கும் என்றும் அதனை மத்திய அரசு ஏற்று நடைமுறைப்படுத்த 2028 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை கூட ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கவலை வேண்டாம்: இருந்தாலும் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதலில் இருந்து தான் இந்த புதிய சம்பளம் கணக்கீடு செய்யப்பட்டு அந்த மீதமுள்ள அரியர் பணமானது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என மத்திய அரசு ஊழியர்களுக்கான அமைப்பின் தலைவர் சிவகோபால் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார் . எந்த ஒரு சம்பள கமிஷனின் பரிந்துரையும் அது அனுமதிக்கப்பட்ட ஆண்டிலிருந்து தான் கணக்கீடு செய்யப்படும் எனக் கூறியிருக்கிறார் .

எவ்வளவு சம்பள உயர்வு: சம்பள கமிஷன் தாமதமாகிறது என்பது குறித்து யாரும் கவலை பட வேண்டாம் அவர்களுக்கான அந்த அரியர் பணம் என்பது 2026 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு விடும் என கூறியிருக்கிறார் . மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 முதல் 34 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது. அதாவது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் என்பது 41,000 ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.

அகவிலைப்படி: சம்பள கமிஷன் பணிகள் மந்தமாக இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிடும் என சொல்லப்படுகிறது. இது 3% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களால் பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்ற சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு பரிசாக அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பும் தீபாவளிக்கும் முன்னதாகவே வெளியாகிவிடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+