youtube-ல் யார் வேண்டுமானாலும் இலவசமாக வீடியோக்களை பதிவிடலாம். சேனல்களையும் ஆரம்பிக்கலாம். தொடக்கத்தில் இந்த தளம் அதிக பிரபலம் அடையாத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. இது ஒரு எளிய வீடியோ-பகிர்வு தளத்திலிருந்து உலகளாவிய நிகழ்வாக உருவானது. இது ஊடகத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை மறுவடிவமைப்பு செய்துள்ளது. youtube இல் கணக்கு இல்லாத ஸ்மார்ட் போன் யூஸர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு யூடியூபில் லட்சக்கணக்கான சேனல்கள் வந்துள்ளன. காலத்துக்கு ஏற்ற வகையில் யூடியூபும் தன்னை அப்டேட் செய்து வருகிறது.
யூடியூப் நிறுவனம் உலகில் பல்வேறு மக்களுக்குச் சம்பாதிக்க பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் யூடியூப் பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது. இதன் காரணமாக தற்போது பலரும் யூடியூப் சேனல்களை தொடங்குகின்றனர். இதனால், யூடியூபில் வெற்றி கண்டு சிலர் அதிக வருமானமும் பார்த்து வருகின்றனர். மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை பலரும் தங்கள் வேலையை விட்டு விட்டு யூடியூப் பக்கம் வருகின்றனர். பல குடும்பங்களுக்கு வருமான ஆதாரமாக இன்று சோசியல் மீடியா பக்கங்கள் மாறி இருக்கின்றன.

வெவ்வேறு 80 மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது. செப்டம்பர் 2024 நிலவரப்படி 2.70 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள பயனர்களைக் கொண்ட YouTube - உலகின் இரண்டாவது அதிகம் பார்வையிடப்பட்ட வலைத்தளம் மற்றும் இரண்டாவது மிகவும் பிரபலமான சமூக ஊடக தளமாகும். இந்தநிலையில், இந்தியாவின் முதல் 10 பணக்கார பெண் யூடியூபர்கள், அவர்களின் நிகர மதிப்பு மற்றும் அவர்கள் தங்கள் டிஜிட்டல் சாம்ராஜ்யங்களை எவ்வாறு கட்டியெழுப்பினார்கள் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
அந்தவகையில் இந்தியாவின் முதல் 10 பணக்கார பெண் யூடியூபர்கள் பட்டியலில் ஸ்ருதி அர்ஜுன் ஆனந்த் என்ற பெண் முதலிடத்தை பிடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு மேக்கப் மற்றும் அழகு பாடங்களில் கவனம் செலுத்தி தனது யூடியூப் வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ருதி, படிப்படியாக ஃபேஷன், வாழ்க்கை முறை மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற வேடிக்கையான உள்ளடக்கத்தில் இறங்கினார். அவருக்கு தற்போது 1.2 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவரது நிகர மதிப்பு தற்போது ரூ.45 கோடியாக உள்ளது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள நிஷா மதுலிகா, புதுபுது விதமான தனது சமையல் மூலம் பிரபலமானார். 2011 இல் தனது யூடியூப் சேனலைத் தொடங்கி எளிய சைவ உணவுகள் குறித்து பகிர்ந்து வந்தார். அவரது சமையல் முறைகள் மற்றும் முழுமையான விளக்கங்கள் காரணமாக இல்லத்தரசிகளிடையே அவர் மிகவும் பிரபலமானவர். தற்போது நிஷா மதுலிகாவுக்கு 1.47 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இதேபோல், கோமல் பாண்டே என்பவர் ரூ.30 கோடி நிகர மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். கோமல் பாண்டே, 2017 ஆம் ஆண்டு தனது யூடியூப் சேனலைத் தொடங்கினார், அதில் அழகு, ஃபேஷன் மற்றும் ஸ்டைலிங் குறித்து பகிர்ந்து பிரபலமானார். தனது சேனலைத் தொடங்குவதற்கு முன்பு, கோமல் பாண்டே, பாப்எக்ஸோவுடன் பணிபுரிந்தார். பல்வேறு ஆடைகளை அணிந்து தனது தனித்துவமான ஸ்டைலிங் புகைப்படங்களை பதிவிட்டதன் மூலம் இந்தியாவில் முன்னணி ஃபேஷன் செல்வாக்கு உள்ளவராக உருவெடுத்துள்ளார்.
4வது இடத்தில் உள்ள பிரஜக்தா, ரூ.16 கோடி சொத்து வைத்துள்ளார். இவருக்கு "மோஸ்ட்லிசேன்" என்ற மற்றொரு பெயரும் உள்ளது. 2015 இல் தனது யூடியூப் சேனலைத் தொடங்கிய இவர், இப்போது 72 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். பெரும்பாலும் பல வேடங்களில் நடிக்கும் அவர், ஈர்க்கக்கூடிய மற்றும் நகைச்சுவையான உள்ளடக்கங்களை பதிவிட்டு பிரபலமாகியுள்ளார். அவரது பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் காரணமாக அவருக்கு கணிசமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இந்தியாவின் முதல் 10 பணக்கார பெண் யூடியூபர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள அனிஷா தீட்சித், 2013 இல் தனது யூடியூப் சேனலை தொடங்கினார். தனது நகைச்சுவை மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்த வீடியோக்களை பதிவிட்டு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அவரது சேனலில் தற்போது 34.4 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இவரது சொத்து மதிப்பு சுமார் 15 முதல் 20 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல், நிஹாரிகா சிங்,(13 கோடி சொத்து மதிப்பு), பூஜா லுத்ரா (9 கோடி சொத்து), கபிதா சிங் (6-7 கோடி சொத்து),
ஹிமான்ஷி டெக்வானி(1- 2 கோடி சொத்து) ஆகியோர் தங்களது தனித்திறமைகளை மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications