மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம், வருடாந்திர அடிப்படையில் மார்ச் மாதம் 1.34 சதவீதமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் -0.92 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT), வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மொத்த விலை பணவீக்கம் (WPI) தொடர்ந்து 11 மாதமாக குறைந்து வருகிறது. பணவீக்கம் என்பது பல பிரிவுகள், பல துறைகளை சார்ந்து இருந்தாலும், முதன்மையாக கச்சா எண்ணெய், எரிசக்தி விலைகள், உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அடிப்படையில் எதிரொலிகே்கும்.

அந்த வகையில் எரிபொருள், உணவு பொருட்களின் விலை சரிவால் ஏப்ரல் மாதம் சில்லறை பணவீக்கம் மட்டும் அல்லாமல் மொத்த விலை பணவீக்கமும் சரிவடைந்து உள்ளதை மத்திய அரசு வெளியிட்ட தரவுகள் மூலம் உறுதியாகியுள்ளது.
மொத்த விலை பணவீக்கத்தில் Primary articles எனப்படும் முக்கிய பொருட்கள் மீதான பணவீக்கம் மார்ச் மாதம் 2.40 சதவீதமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதம் 1.60 சதவீதமாக குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் சக்தி பணவீக்கத்தை பார்த்தால் கடந்த 3 மாதத்தில் பிப்ரவரியில் 13.96 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில் 8.96 சதவீதமாகவும், ஏப்ரலில் 0.93 சதவீதமாக குறைந்துள்ளது.
இதேபோல் உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் கடந்த 3 மாதத்தில் பிப்ரவரியில் 1.94 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில் -0.77 சதவீதமாகவும், ஏப்ரல் மாதத்தில் -2.42 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் உணவுப் பொருட்கள் விலை உயர்ந்தாலும், தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் எரிபொருள் பொருட்களின் விலைகள் குறைந்தது மூலம் மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் நீண்ட காலத்திற்கு பின்பு மையனஸ் அதாவது எதிர்மறை வளர்ச்சியாக -0.92 சதவீதத்தை பதிவு செய்துள்ளது. மார்ச் மாத்தில் பதிவான 1.34 சதவீதம் என்பது 29 மாதங்களில் இல்லாத சரிவாகும்.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்கம் குறைய மிகவும் முக்கியமான காரணம் உணவு பணவீக்கம் குறைந்தது தான். மார்ச் மாதத்தில் 4.79 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 3.84 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜூன் 6-8 ஆம் தேதிகளில் நடக்கும் ஆர்பிஐ-யின் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறையுமான என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சில்லறை பணவீக்கம் மட்டும் அல்லாமல் மொத்த விலை பணவீக்கமும் குறைந்துள்ளதால் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் குறைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications