இந்தியா 2வது கொரோனா அலையை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், 3வது அலை கட்டாயம் வரும் என்ற நிலைப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பணவீக்கம் பற்றி மோர்கன் ஸ்டான்லி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு மற்றும் நிதியியல் வங்கி சேவை அளிக்கும் மோர்கன் ஸ்டான்லி, இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 9.1 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளது. மார்ச் மாதத்தில் இதன் அளவு 7.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உணவு பணவீக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கமும் அதிகரித்துள்ளது என மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
பொதுவாக மொத்த விலை பணவீக்கம் என்பது குறிப்பிட்ட பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றத்தைக் கணக்கீட்டு நாட்டின் பணவீக்கத்தை அளவீடும் முறை. இதேபோல் இந்தியா தற்போது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் நுகர்வோர் பணவீக்க குறியீடு மக்கள் தங்கள் வீட்டில் வாங்கும் பொருட்களின் விலையை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதாகும்.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் நுகர்வோர் பணவீக்க குறியீட்டின் அளவு 3.9 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது மோர்கன் ஸ்டான்லி, இது பிப்ரவரி மாதம் 5.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 2021 மார்ச் காலக்கட்டத்தில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்தி கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 20.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருக்கும் என மோர்கன் ஸ்டான்லி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இது பிப்ரவரி மாதம் -3.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications