உணவு பொருட்கள் விலை அதிகரிப்பால் நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.55% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த பணவீக்க விகிதமானது 1.48 சதவீதமாக இருந்தது கவனிக்கதக்கது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 0.58% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒப்பிடும்போது அதிகமாகும். இது உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி விலை அதிகரிப்பு காரணமாக இந்த மொத்த பணவீக்க விகிதமும் அதிகரித்துள்ளது.
இதே கடந்த நவம்பர் மாதத்தின் உணவு பணவீக்கமானது 3.94% ஆக உள்ளதாகவும், இது முந்தைய மாதத்தில் 6.37% ஆகவும் இருந்தது. எனினும் காய்கறிகளின் விலை மற்று உருளைக்கிழங்கின் விலையானது முறையே 12.24 சதவீதம் மற்றும் 115.12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 8.43 சதவீதமாகவும் எனினும் எரிபொருள் மற்றும் பவர் பாஸ்கெட் - 9.87 சதவீதமாகவும் சற்று குறைந்துள்ளது.
நவம்பர் மாதத்தில் உணவு பொருட்களின் விலை சற்று குறைந்திருந்தாலும், உற்பத்தி விலைகள் சற்று கடுமையானதாக இருந்தது என வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகம் திங்களன்று வெளிட்யிட்ட தரவுகளின் படி, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே சில்லறை பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீடு அக்டோபர் மாதத்தில் 7.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி வட்டியை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், பழைய நிலை தொடரும் என தெரிவித்தது. மேலும் சில்லறை விலை பணவீக்கம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications