இந்தியாவில் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் அடிப்படையிலான பணவீக்கம் 12.54% அதிகரித்துள்ளது.
இது குறித்து வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையின் படி, கடந்த அக்டோபர் மாதத்தில் எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக, நாட்டின் மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம் 12.54% ஆக அதிகரித்துள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.66% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கவலை தரும் மொத்த விலை குறியீடு
கடந்த 5 மாதங்களாக சரிவைச் சந்தித்து வந்த மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம், கடந்த அக்டோபர் மாதத்தில் மீண்டும் உச்சத்தினை தொட்டு வந்தது. இதற்கிடையில் மொத்த விலை குறியீடு 139.1 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மினரல் ஆயில்ஸ், அடிப்படை உலோகங்கள், உணவு பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை வாயு, கெமிக்கல்ஸ் மற்றும் கெமிக்கல் பொருட்கள் உட்பட பல பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக இந்த உயர்வு நிகழ்ந்துள்ளது.
உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம்
உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 12.04% அதிகரித்துள்ளது. இது அந்த மாதத்தில் 11.41% ஆக இருந்தது.
அக்டோபர் மாதத்தில் எரிபொரு மற்றும் மின்சாரம் குறித்தான பணவீக்கம் 37.18 அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 24.81% ஆக இருந்தது.
Array
இதே கச்சா எண்ணெய் பெட்ரோலியம் பொருட்கள் மீதான பணவீக்கம் 80.57% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 71.86% ஆக இருந்தது.
இதே உணவு பணவீக்கமானது அக்டோபர் மாதத்தில் -1.69% ஆக உள்ளது. இதே செப்டம்பர் மாதத்தில் -4.69% ஆக உள்ளது.
காய்கறிகளின் விலை விகிதம்
இதே காய்கறிகளின் விலை விகிதம் -18.49% ஆக குறைந்துள்ளது. இதே வெங்காயத்தின் விலையானது - 25.01 ஆக உள்ளது.
ICRA-ன் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறுகையில், முக்கிய பொருட்களின் விலை குறித்தான குறியீடானது 1% அதிகரித்துள்ளது.
அடுத்த மாதங்களில் நிவாரணம்
தற்போது நாட்டில் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், மூலதன பொருட்கள் செலவு அதிகரிப்பு, உற்பத்தி செலவு அதிகரிப்பு, வெளியீட்டு விலை அதிகரிப்பு காரணமாக இந்த அதிகரிப்பு வந்திருக்கலாம். ஆனால் தற்போது அரசு எரிபொருட்கள் மீதான விலையினை குறைந்துள்ள நிலையில், அடுத்தமாதம் சற்றே நிவாரணம் அளிக்கும் என்றும் கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications