மார்ச் 2021க்கு பின் குட் நியூஸ்.. மொத்த விலை பணவீக்கம் சரிவு..!

இந்தியாவின் மொத்த விலைக் பணவீக்கம் (WPI) அக்டோபர் மாதம் 8.39 சதவீதமாகக் குறைந்துள்ளது, மார்ச் 2021 க்குப் பிறகு இதுதான் மிகவும் குறைவான அளவீடாக உள்ளது.

இதே காலகட்டத்தில் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 7.7 சதவீத அளவில் உள்ளது, 2022 ஆம் ஆண்டில் இது தான் குறைவான பணவீக்க நிலை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 40 வருட உச்ச அளவான 9.1 சதவீத உயர்வைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

மொத்த விலை பணவீக்கம் (WPI)

மொத்த விலை பணவீக்கம் (WPI)

இந்தியாவின் மொத்த விலைக் பணவீக்கம் (WPI) அக்டோபர் மாதம் 8.39 சதவீதமாகக் குறைய முக்கியக் காரணம் அனைத்து விதமான உற்பத்தி பொருட்களின் விலை குறைந்தது மிகவும் முக்கியமானது எனத் திங்கட்கிழமை மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

18 மாதங்கள்

18 மாதங்கள்

அக்டோபர் மாதத்திற்கான மொத்த விலைக் பணவீக்கம் 8.39 சதவீதமாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 2022 இல் 10.70 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. கடந்த 18 மாதங்களில் மொத்த விலைக் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தில் வந்தது இதுவே முதல் முறையாக உள்ளது. கடைசியாக மார்ச் 2021-ல் மொத்த விலைக் பணவீக்கம் 7.89 சதவீதமாக இருந்தது.

முக்கியப் பொருட்கள்

முக்கியப் பொருட்கள்

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மொத்த விலைக் பணவீக்க விகிதத்தில் சரிய முதன்மையாகக் காரணமாக இருந்தது மினர்ல் ஆயில், அடிப்படை உலோகங்கள், ஃப்ரிகேடெட் மெட்டல் பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை, ஜவுளி, மற்ற உலோகம் அல்லாத கனிம பொருட்கள், கனிமங்கள் போன்றவற்றின் விலை வீழ்ச்சியால் பணவீக்க அளவுகள் சரிந்துள்ளது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்கள் பணவீக்கம்

உணவுப் பொருட்கள் பணவீக்கம்

அக்டோபர் மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 8.33 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் 11.03 சதவீதம் ஆக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் 39.66 சதவீதம் ஆக இருந்த காய்கறிகளின் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 17.61 சதவீதம் ஆக இருந்தது. இதேபோல் அக்டோபர் மாதம் எரிபொருள் மற்றும் பவர் பிரிவின் பணவீக்கம் 23.17 சதவீதம் ஆக இருந்தது, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கம் 4.42 சதவீதம் ஆக இருந்தது.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

மேலும் சில்லறை பணவீக்கம் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின் படி உணவு விலை உயர்வில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் நாட்டின் வர்த்தகம், பணப் புழக்கம் வளர்ச்சி அடிப்படையில் அக்டோபர் மாதம் சில்லறை விலை பணவீக்கம் 6.73 சதவீதம் ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கில் அப்பர் லிமிட் அளவான 6 சதவீதம் அளவீட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

செப்டம்பர் மாதம் நாட்டின் சில்லறை பணவீக்க விகிதம் 7.41 சதவீதம் ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாணயக் கொள்கையை வடிவமைக்கச் சில்லறை பணவீக்கத்தைத் தான் அடிப்படையாக வைக்கிறது. இதனால் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மே மாதத்தில் இருந்து ரெப்போ விகிதத்தை 1.90 சதவீதம் அதிகரித்துத் தற்போது 5.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+