நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41% ஆக இருந்தது. எனினும் இது செப்டம்பர் மாதத்தில் 10.7% ஆக குறைந்துள்ளது.
எனினும் கடந்த 18 மாதங்களாகவே தொடர்ந்து இரட்டை இலக்கில் காணப்படுகின்றது.
மொத்த விலை பணவீக்கமானது அதிகளவிலான மினரல் ஆயில்கள், உலோகங்கள், மின்சார கட்டணம், துணி வகைகள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை, கெமிக்கல் மற்றும் கெமிக்கல் சார்ந்த பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம் மற்றும் ஜவுளித்துறை சார்ந்த விலை அதிகரிப்பால், செப்டம்பர் மாதத்திலும் பணவீக்கமும் உச்சம் தொட்டது.
WPI எப்படி அதிகரிக்கப்படுகின்றது?
மொத்த வணிகங்கள் மற்றும் வணிகங்களுக்கு விற்பனை செய்யும் பொருட்களால் மொத்த விலை பணவீக்கம் அளவிடப்படுகின்றது. இது மூலதன செலவினங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் WPI விகிதம் ஆதரிக்கப்படலாம்.
18வது மாதமாக 2 இலக்கில் ஏற்றம்
தொடர்ச்சியாக 18 மாதமாக இரட்டை இலக்கில் அதிகரித்து வரும் மொத்த விலை பணவீக்கம், இந்த ஆண்டு மே மாதத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 15.88% ஆக அதிகரித்துள்ளது. இதே ஆகஸ்ட் மாதத்தில் 12.41% ஆக இருந்தது. இதே ஜூலை மாதத்தில் 14.07% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
WPI-ல் எத்தனை பொருட்கள்
மொத்த விலை பணவீக்கம் மொத்தம் 697 பொருட்களை கவர் செய்கிறது. இதில் முதன்மை பொருட்கள் 117ம், எரிபொருள் மற்றும் ஆற்றல் துறையை சார்ந்த 16 பொருட்களும், உற்பத்தி சார்ந்த பொருட்கள் 564 பொருட்களும், ஆக மொத்தம் 697 பொருட்களும் அடங்கும்.
புதிய அறிமுகம்
எனினும் இந்த மூன்று பிரிவுகளில் 1176 பொருட்கள் விலையானது முன்மொழியப்பட்டுள்ளது. இதில் முதன்மை பொருட்கள் 131 பொருட்களும், எரிபொருள் மற்றும் ஆற்றல் பொருட்கள் 19 பொருட்களும், உற்பத்தி சார்ந்த பொருட்கள் 1026ம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
உணவு பணவீக்கம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் உணவு பனவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 11.03% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 12.37% ஆக இருந்தது. இதே உற்பத்தி பொருட்கள் சார்ந்த பிரிவு 6.34% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. முதன்மை பொருட்கள் வளர்ச்சியானது 11.73% வளார்ச்சியினை கண்டுள்ளது. எனினும் எரிபொருள் மற்றும் மின்சார துறையில் சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 33.67% ஆக இருந்தது, செப்டம்பரில் 32.61% ஆக குறைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications