நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால், மூன்றரை வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த விலை பணவீக்கம், கடந்த அக்டோபரில் 0.16 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.33%- மாக இருந்தது.
இதுவே கடந்த ஜூன் 2016ல் மொத்த விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 0.9 சதவிகிதமாக இருந்தது.

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலை சரிந்ததன் காரணமாக இந்த மொத்த விலை பணவீக்கமானது குறைந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. .
மேலும் உணவு அல்லாத பொருட்களின் விலை மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களின் விலையில் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதனால் அக்டோபர் மாத மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே சில்லறை பணவீக்கமானது 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.62 சதவிகிதம் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபரில் உற்பத்தி பணவீக்கம் -0.84%மாகவும், இது செப்டம்பரில் -0.42% இருந்துள்ளது. முக்கிய துறைகளின் பணவீக்கம் கடந்த அக்டோபரில் -1.6%-மாகவும், இது செப்டம்பரில் -1.1%மாகவும் இருந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பால், உணவுப் பொருட்களின் பணவீக்கம் 3.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது உணவு அல்லாத பொருட்களுக்கு 0.3 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், இதே தாதுக்களுக்கு 3.2 சதவிகிதமும், இதே கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு 0.7 சதவிகிதமும், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது சரிந்துள்ளது.
மொத்த பணவீக்க அடிப்படையில் உணவுக் குறியீடு கடந்த செப்டம்பரில் 5.98 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த அக்டோபரில் 7.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதே எரிபொருள் மற்றும் மின்சார துறை பணவீக்கம் -8.27%மாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதம் -7.05%மாகவும் இருந்துள்ளது.
எனினும் உற்பத்தி துறை, உலோகம், ரசாயன பொருட்கள் போன்ற பிரிவுகளில் இன்னும் தேவை அதிகம் இல்லாததையே இந்த குறியீடு குறிக்கிறது. இதே காய்கறிகள் விலை அதிகரித்திருப்பது சில்லறை பணவீக்க விலை விகிதத்திற்கு வழிவகுத்தது. இந்த பணவீக்கம் அதிகரிப்பு வரும் டிசம்பர் மாதத்திலும், ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு வட்டி குறைப்பை செய்ய வழிவகை செய்ய கூடும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications