டெல்லி: கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 5.85% ஆக சரிவினைக் கண்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் என்பது 8.39% ஆக இருந்தது. எனினும் இது நவம்பர் மாதம் குறைந்து, அதுவும் 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து 5.85% ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை குறியீடானது 14.87% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் சரிவு
இது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்ல வழிவகுக்கும் எனலாம். ஏனெனில் மொத்த விலை பணவீக்கம் சரியும்போது இது மற்ற உணவு பொருட்கள் உள்ளிட்ட பலவற்றின் விலை குறைய வழிவகுக்கலாம்.
உணவு பொருட்கள், அடிப்படை உலோகங்கள், ஆடை விலைகள், கெமிக்கல்கள், கெமிக்கல் சார்ந்த பொருட்கள் மற்றும் பேப்பர், பேப்பர் சார்ந்த பொருட்கள் என பலவும் கடந்த ஆண்டினை காட்டிலும் விலை குறைந்துள்ள நிலையில், இது பணவீக்கம் குறைய வழிவகுத்துள்ளது.
உணவு பணவீக்கம்
மொத்த விலை உணவு பணவீக்கம் என்பது கடந்த அக்டோபர் மாதத்தில் 6.48% ஆக இருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 2.17% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு குழுமத்தில் காய்கறிகளின் விலையானது கடந்த நவம்பர் மாதத்தில் -20.08% சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டு 3.44% ஏற்றம் கண்டிருந்தது.
மற்ற பணவீக்க விகிதங்கள்
முட்டை, இறைச்சி மற்றும் மீன் நடப்பு ஆண்டில் 2.27%மும் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 9.40% ஆக இருந்தது. இதே தானியங்கள் விலையானது இந்த ஆண்டு நவம்பரில் 1.07% ஆகவும், இது கடந்த ஆண்டில் 4.82% ஆகவும் இருந்தது. இதே பருப்பு வகைகள் கடந்த ஆண்டில் 2.84% அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டு 0.56% ஆகவும் உள்ளது. இதே பழங்கள் விகிதமானது கடந்த நவம்பரில் -1.07% ஆகவும், இது கடந்த ஆண்டில் 15.50% ஆகவும் இருந்தது.
சில்லறை பணவீக்கம்
எப்படியிருப்பினும் இந்த செய்தியானது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான செய்தி எனலாம். இதே சில்லறை பணவீக்க விகிதமானது முதல் முறையாக கடந்த நவம்பர் மாதத்தில் 5.88% ஆக குறைந்து, ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் குறைந்துள்ளது. இது கடந்த அக்டோபரில் 6.77% ஆகவும் இருந்தது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications