WPI: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்க விகிதமானது, தொடர்ந்து 10 மாதமாக சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இந்த மொத்த விலை பணவீக்கமானது கடந்த மார்ச் மாதத்தில் 29 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.34% ஆக குறைந்துள்ளது.
இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.85% ஆக இருந்தது. இது அடிப்படை உலோகங்கள், உணவு பொருட்கள், ஜவுளி பொருட்கள், உணவு அல்லாத பொருட்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் காகிதம், காகிதம் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

கடந்த மார்ச் 2022ல் உணவு பணவீக்கம் என்பது 14.63 சதவீதம் எனும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உணவு பொருட்களின் ,மொத்த விலை பணவீக்கம் என்பது மார்ச் 2023ல் 5.48 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி 2023ல் 3.81% ஆக இருந்தது.
கோதுமை மற்றும் தானியங்கள் பண வீக்கம் என்பது 9.16% மற்றும் 3.03% ஆகவும் முறையே உள்ளது. இதே காய்கறிகளின் விலையானது -2.22% ஆகவும், எண்ணெய் விதைகள் பணவீக்கம் - 15.05% ஆவும் சரிவினைக் கண்டுள்ளது.
இதே எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கம் என்பது 8.96% ஆக குறைந்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 14.82% ஆக இருந்தது. இதே உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் என்பது -0.77% ஆக குறைந்துள்ளது. இது முன்னதாக 1.94% ஆக இருந்தது.

சில்லறை பணவீக்கமும் மார்ச் மாதத்தில் சரிவினைக் கண்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீடும் 15 மாத சரிவான 5.66% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதத்தில் 6.44% எனும் அளவுக்கு குறைந்துள்ளது.
இம்மாத தொடக்கத்தில் நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் எதுவும் அதிகரிக்கப்படவில்லை. எனினும் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மட்டும் 250 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் அதன் பலனாக பணவீக்கமும் குறையத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications