இந்தியாவின் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் ஜனவரி மாதம் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது டிசம்பர் மாதம் 0.73 சதவீதமாக இருந்தது என்று புதன்கிழமை வர்த்தக அமைச்சக அறிக்கை கூறுகிறது. ராய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பு 0.53 சதவீதம் உயரும் என்று மதிப்பிட்டுள்ளது.
ஜனவரி மாதத்திற்கான WPI குறியீட்டு மாதாந்திர அடிப்படையில் (-)0.33 சதவிகிதம் சுருங்கியது, இது முந்தைய மாதத்தில் (-)1.12 சதவிகிதம் அளவில் சுருங்கியது குறிப்பிடத்தக்கது. பொதுவாகப் பணவீக்கம் வருடாந்திர அளவுக்குத் தான் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும், ஆனால் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதைத் தொடர்ந்து மாதாந்திர அளவீடுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சில்லறை பணவீக்க அளவீட்டில் உணவு பணவீக்கம் பெரும் பங்கீட்டைக் கொண்டு இருக்கும் வேளையில், மொத்த விலை பணவீக்க அளவீட்டில் உற்பத்தி பொருட்களின் விலை அளவீடு சுமார் 64.23 சதவீத அளவீட்டைக் கொண்டு உள்ளது.
ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் 6.85 சதவீதமாக இருந்தது. முதன்மைப் பொருட்கள் பிரிவு அதாவது Primary Articles பிரிவின், ஜனவரி மாத பணவீக்கம் 1.04 சதவீதம் குறைந்து 3.84 சதவீதமாக உள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் மொத்த விலை பணவீக்கம் 0.20 சதவீதமாகக் குறைந்துள்ளது, எரிபொருள் பணவீக்கம் மட்டுமே. ஆனால் எனர்ஜி பணவீக்கத்தை கணக்கிட மின்சாரத்தின் பணவீக்கத்தையும் சேர்க்க வேண்டும். அந்த வகையில் எரிபொருள் மற்றும் மின்சாரம் சேர்த்த பணவீக்கம் ஜனவரியில் (-)0.51 சதவீதமாகச் சுருங்கியது குறிப்பிடத்தக்கது.
உற்பத்திப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி மாதம் -1.13 சதவீதமாக இருக்கிறது. இந்த வாரத் தொடக்கத்தில், இந்தியாவின் சில்லறை பணவீக்கத் தரவு வெளியிடப்பட்டது, இது டிசம்பரில் நான்கு மாதங்களில் இல்லாத 5.69 சதவீதத்திலிருந்து வருடாந்திர அடிப்படையில் 5.10 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 8ஆம் தேதி நடந்த ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் மார்ச் காலாண்டில் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதமாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2025 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 5 சதவீதமாகவும், 2வது காலாண்டில் 4 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 4.6 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 4.7 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications