மொத்த விலை பணவீக்கம் 10.66 சதவீதமாகச் சரிவு..!

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 10.66 சதவீதமாகக் குறைந்து பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. உலகின் பல முன்னணி வல்லரசு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவது பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருவது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 11.16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் செப்டம்பர் 2021ல் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 11.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த வேளையில் கணிப்பை விடவும் குறைவாக இருந்த நிலையில் சந்தைக்கு இது சாதகமாக அமைந்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் மொத்த விலை பணவீக்கம் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து இரண்டு இலக்க அளவீட்டிலேயே இருந்த நிலையில், தற்போது ஒரு இலக்கு எண்ணிற்குக் குறையத் துவங்கியுள்ளது.

இந்தியாவில் மொத்த விலை பணவீக்கத்தை 3 முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படுகிறது. 1. எரிபொருள் மற்றும் மின்சாரம் 2. உணவுப் பொருட்கள் 3. உற்பத்தி பொருட்கள்

மொத்த விலை பணவீக்கம் 10.66 சதவீதமாகச் சரிவு..!

இதன்படி செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் மொத்த பணவீக்கத்தின் அளவு 24.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 26.09 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 11.39 சதவீதத்தில் இருந்து 11.41 சதவீதமாக இந்தச் செப்டம்பர் மாதம் அதிகரித்துள்ளது. ஆனால் மொத்த விலை பணவீக்கத்தில் பெரும் பகுதி ஆதிக்கம் செய்யும் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் அதிகளவில் குறைந்துள்ளது.

உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 3.43 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் இதன் அளவு 1.14 சதவீதமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. காய்கறிகள் மீதான பணவீக்கம் அதிகளவில் குறைந்துள்ள வேளையில், பருப்பு பொருட்களின் விலை அதிகரித்து இதன் பணவீக்கம் 9.42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதேவேளையில் கச்சா எண்ணெய், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு விலை மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 40.03 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 43.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் இதன் விலை புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி ரீடைல் பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் தனது நாணய கொள்கை முடிவுகளை அறிவிக்கும் என்பதால் மொத்த விலை பணவீக்க அளவீடுகள் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் பெரிய தாக்கம் இருக்காது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+