உணவு பொருட்கள் விலை அதிகரிப்பால் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.48% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த பணவீக்க விகிதமானது 1.32 சதவீதமாக இருந்தது கவனிக்கதக்கது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் ஜீரோ சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி விலை அதிகரிப்பு காரணமாக இந்த மொத்த பணவீக்க விகிதமும் அதிகரித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் உணவு பொருட்களின் விலை சற்று குறைந்திருந்தாலும், உற்பத்தி விலைகள் சற்று கடுமையானதாக இருந்தது என வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சகம் திங்களன்று வெளிட்யிட்ட தரவுகளின் படி, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அக்டோபரில் உணவு பணவீக்கம் 6.37 சதவீதமாக இருந்தது. இது முந்தைய மாதத்தில் இது 8.17 சதவீதமாக இருந்தது. காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கின் விலை உயர்வு முறையே 25.23 சதவீதம் மற்றும் 107.70 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே உணவு அல்லாத பொருட்கள் மற்றும் தாதுக்களின் பணவீக்கம் முறையே 2.85 சதவீதமாகவும், 9.11 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
எனினும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பிரிவில் பணவீக்கம், அக்டோபரில் 2.12 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.61 சதவீதமாக இருந்தது. எனினும் எரிபொருள் மற்றும் பவர் பாஸ்கெட் அக்டோபர் மாதத்தில் - 10.95 சதவீதம் குறைந்துள்ளது சற்றே ஆறுதல் கொடுக்கும் விஷயமாகும்.
இதே சில்லறை பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீடு அக்டோபர் மாதத்தில் 7.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் பொருளாதார நிலை குறித்த அறிக்கையில், பணவீக்கத்தின் அழுத்தம் பொருளாதார மீட்சியில் இடையூறாக அமையும். இது பொருளாதார வளர்ச்சியில் மேலும் பின்னடைவை காண வழிவகுக்கும்.
அதோடு தற்போது விநியோக சங்கிலியில் முன்னேற்றம் இருந்தாலும், உற்பத்தியில் பிரச்சனைகள் தொடர்வதால் இது மேற்கொண்டு விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இது மோசமான விலையேற்றத்திற்கே வழிவகுக்கும்.
கடந்த வாரத்தில் நடைபெற்ற நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வட்டியை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், பழைய நிலை தொடரும் என தெரிவித்தது. மேலும் சில்லரை விலை பணவீக்கம், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications