உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு.. ! ஆகஸ்ட் மாதத்தில் WPI விகிதம் 0.16% ..!

உணவு பொருட்கள் விலை அதிகரிப்பால் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.16% அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் இந்த பணவீக்க விகிதமானது 0.58% அதிகரித்திருந்தது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 1.17 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு, உற்பத்தி விலை அதிகரிப்பு காரணமாக இந்த மொத்த பணவீக்க விகிதமும் அதிகரித்துள்ளது.

உணவு பொருட்கள் விலை அதிகரிப்பு.. ! ஆகஸ்ட் மாதத்தில் WPI விகிதம் 0.16% ..!

கடந்த நான்கு மாதங்களாகவே மொத்த விலை பணவீக்க விகிதமானது எதிர்மறையாகவே வந்து கொண்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் சற்று அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் - 1.57% ஆகவும், இதே மே மாதத்தில் -3.37%மும், ஜூன் மாதத்தில் -0.58% வந்திருந்தது. இப்படி ஒரு நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 0.16% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 17 பொருட்களில் 10 பொருட்கள் விலையானது லாக்டவுனுக்கு பின்பு விலைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள், அடிப்படை உலோகங்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பலவும் விலை அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இதில் உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 3.84% ஆக உள்ளது. கடந்த சில மாதங்களாகவே குறைவாகவே இருந்து வந்த உருளைக்கிழங்கின் விலையானது, ஆகஸ்ட் மாதத்தில் 82.93% அதிகரித்துள்ளது. இதே காய்கறிகளின் விலை 7.03% அதிகரித்துள்ளது. வெங்காயம் - 34.48% ஆகவும், எரிபொருள் மற்றும் மின்சார துறை விகிதமானது 9.68% குறைந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 9.84% ஆக இருந்தது கவனிக்கதக்கது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கமானது 1.27% ஆக அதிகரித்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 0.51% ஆகவும் இருந்தது. எனினும் இந்த விகிதமானது திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பொருட்கள், ஜவுளி பொருட்கள், ஆடை, காகிதம் மற்றும் காகித பொருட்கள், ரசாயனங்கள், ரப்பர், பிளாஸ்டிக், பிற உலோகம் அல்லாத கனிம பொருட்கள் என அனைத்தும் விலை அதிகரித்தன. எனினும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் இயந்திரங்கள் மற்றும் கணினி மென்பொருள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஆப்டிகல் பொருட்கள், பர்னிச்சர் பொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்தே காணப்பட்டது. அதே சமயம் மோட்டார் வாகனங்கள் மற்றும் டிரெய்லர்கள் விலை மாறமல் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+