மொத்த விலை பணவீக்கம் என்பது பிப்ரவரி மாதம் 3.85% ஆக குறைந்துள்ளது. இதே ஜனவரி மாதத்தில் 4.73% ஆக இருந்தது.
இது கடந்த ஆண்டினை காட்டிலும் 13.43% ஆக சரிவினைக் கண்டுள்ளது. இது கச்சா எண்ணெய் விலை, உணவு, உணவு அல்லாத பொருட்கள், கணினி, மின் சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், கெமிக்கல்கள், கெமிக்கல் சார்ந்த பொருட்கள் என பல பொருட்களின் விலையை பொறுத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய பணவீக்கம்
கோதுமை பணவீக்கம் என்பது 18.54% ஆகவும், தானியங்களின் பணவீக்கம் 13.95% ஆகவும், நெல், பழங்கள், பால் மற்றும் முட்டை, இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் பணவீக்கமும் முறையே 8.60%, 7.02%, 10.33%, 1.49% ஆகவும் உள்ளது.
காய்கறிகள் & வெங்காய பணவீக்கம்
இதே காய்கறிகளின் பணவீக்கம் -21.53 சதவீதமாகவும் சரிவினைக் கண்டுள்ளது. இதே உருளைக் கிழங்கு மற்றும் வெங்காய பணவீக்கம் -14.30 சதவீதமாகவும் மற்றும் -40.14 சதவீதமாகவும் முறையே உள்ளது.
உணவு அடிப்படையிலான WPI
உணவு அடிப்படையிலான மொத்த விலை பணவீக்கம் என்பது பிப்ரவரி 2022ல் 8.19 சதவீதமாகவும், இதே உணவு பொருட்கள் குறித்தான அறிக்கை ஜனவரி மாதத்தில் 171.2 ஆகவும், இது கடந்த பிப்ரவரியில் 2023ல் 171.3 ஆகவும் உள்ளது. இதே உணவு பொருட்கள் மீதான மொத்த விலை பணவீக்கம் 2023ல் 2.95% ஆகவும் பிப்ரவரி 2023ல் 2.76% ஆகவும் உள்ளது.
சில்லறை பணவீக்கம்
மொத்த பணவீக்கம் என்பது குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் சில்லறை பணவீக்கம் என்பது 6.44% ஆக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.52% ஆகவும் உள்ளது. இது குறைந்திருந்தாலும் ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு கீழாக காணப்படுகின்றது. இது கடந்த மாதத்தினை காட்டிலும் தற்போது வரையில் ரிசர்வ் வங்கியின் இலக்கிற்கு மேலாகவே காணப்படுகிறது.
வட்டி விகிதம்
தொடர்ந்து ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் வட்டி அதிகரிப்பினை செய்யலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆக இது மேற்கொண்டு பணவீக்கத்தினை குறைக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications