ஜனவரி மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும், நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.03 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது டிசம்பர் மாதம் 1.22 சதவீதமாகவும், கடந்த வருடம் இதே ஜனவரி மாதத்தில் 3.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதத்தில் மத்திய அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக அதிகமாக இருந்த உணவுப் பொருட்களின் விலை நிலை பெரிய அளவில் குறைக்கப்பட்டது, ஆனாலும் உற்பத்தி பொருட்களில் ஏற்பட்ட விலை உயர்வு மொத்த விலை பணவீக்கத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது என வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 2020ல் -1.11 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் ஜனவரி மாதத்தில் -2.8 சதவீதமாகச் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாத துவக்கத்தில் பல பொருட்களின் விலைவாசி மிகவும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பின் பெரிய அளவில் குறைந்த காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன் படி ஜனவரி மாதம் காய்கறிகள் மீதான பணவீக்கம் -20.82 சதவீதமாக இருந்த நிலை, உருளைக்கிழங்கு மீதான பணவீக்கம் மட்டும் 22.04 சதவீதமாக இருந்தது. இதேபோல் எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவு பணவீக்கம் -4.78 சதவீதமாக ஜனவரி மாதம் இருந்துள்ளது. இதேபோல் உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 4.16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 5ஆம் தேதி நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் சாதகமான நிலையில் இருக்கும் நிலையில், வட்டி குறைப்பு தேவையும் இல்லை, அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டு வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.
நுகர்வோர் விலை அளவீட்டைப் பொருத்து நாட்டில் ரீடைல் பணவீக்கத்தின் அளவீடு ஜனவரி மாதத்தில் 4.06 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications