செக் எழுதும்போது "ONLY" போடலன்னா பெரிய பிரச்சினையாயிடும்! ஏன் தெரியுமா?

வங்கிகளில் செக் நிரப்பும்போது 2 இடங்களில் தொகையை குறிப்பிட வேண்டும். ஒன்றை எழுத்தால் குறிப்பிட வேண்டும். மற்றொன்றை எண்களால் குறிப்பிட வேண்டும். எழுத்தால் தொகையை எழுதிய பின் ஆங்கிலத்தில் "ONLY" என்று போடுவார்கள். இது ஏன் என்று தெரியுமா?

"ONLY" போடப்படுவதற்கான காரணம்: செக்கில் எழுத்தால் தொகையை எழுதிய பின்னர் கொஞ்சம் இடைவெளி இருக்கும். இதை செக் பெறுபவர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். காலியாக இருக்கும் இடத்தில் அவர்கள் கூடுதலாக தொகையை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது செக் வழங்கியவருக்கு தெரியாமல் அதைவிட அதிகமான தொகையை மாற்றலாம். இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் "ONLY" என்ற வார்த்தை போடப்படுகிறது.

செக் எழுதும்போது

உதாரணமாக நீங்கள் ஒருவருக்கு ரூ.10,000 செக் எழுதிக் கொடுக்கிறீர்கள். "TEN THOUSAND" என்று மட்டும் போட்டுவிட்டு மீதம் இருக்கும் இடங்களை அப்படியே விட்டிருந்தால் மோசடி செய்பவர்கள் "TEN THOUSAND NINE HUNDRED" என அதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதனால் தான் தொகையை எழுதி முடித்தவுடன் உடனடியாக ஒன்லி என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கின்றனர். இந்நாள் வரை இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Also Read

இந்த சிறிய பழக்கம் நிதி இழப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். எழுத்துக்களுக்கு மட்டுமல்ல எண்களையும் சரியாக எழுத வேண்டும். எழுத்தால் எழுதப்பட்ட தொகையும், எண்களால் எழுதப்பட்ட தொகையும் ஒன்றுக்கொன்று சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் செக் ப்ராசஸ் செய்யப்படும் போது எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்கும். தொகையை எழுதும் போது எப்படி "ONLY" போடுகிறோமோ அதே போல எண்களால் எழுதும்போது "/-" போட வேண்டும். உதாரணமாக எழுத்தில் "TEN THOUSAND ONLY" என்று எழுதி இருந்தால்.. எண்களில் ரூ.10,000/- என்று எழுத வேண்டும்.

ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன?: தொகையை எழுதி முடித்த பிறகு ஒன்லி என்று போடப்படுவது சிறந்த நடைமுறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி இதை கட்டாயமாக அனைவரும் எழுத வேண்டும் என்ற விதியை வகுக்கவில்லை. ஆனால் பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் எந்தவித நிதி இழப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஒன்லி என்று எழுதுமாறு அறிவுறுத்தி வருகின்றன. இப்போது எல்லோரும் பயன்படுத்தும் பொதுவான வழக்கமாகவே இது மாறிவிட்டது.

செக் எழுதுபவர் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?: செக் எழுதுபவர் எண்களில் எழுதும் போதும் சரி.. எழுத்துக்களால் எழுதும் போதும் சரி.. இடைவெளி விடக்கூடாது. எண்களில் எழுதி விட்டு /- கட்டாயம் போட வேண்டும். அதேபோல எழுத்தால் எழுதும் போது ஒன்லி என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சின்ன விஷயமாக தோன்றலாம். ஆனால் உங்கள் செக் பாதுகாப்பாக இருப்பதற்கும், நிதி மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கும் தான் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+