நீர் இன்றி அமையாது உலகு இது வள்ளுவர் வாக்கு. ஆனால் கச்சா எண்ணெய் இன்றி அமையாது உலகு... இது 21-ம் நூற்றாண்டின் வாக்கு.
உலகில் குட்டி குட்டி நாடுகள் தொடங்கி, அமெரிக்கா போன்ற பெரிய பொருளாதார சக்திகள் வரை பல நாட்டு அரசியல் இந்த கச்சா எண்ணெய்யால் தான் மாற்றப்பட்டு இருக்கின்றன.
ஆனால் இன்று, அப்பேர்பட்ட கச்சா எண்ணெய்யின் விலையே படு பாதாளத்தைத் தொட்டு இருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை
ஸ்பாட் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 29.29 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஸ்பாட் WTI கச்சா எண்ணெய் விலை 25.52 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆனால் கச்சா எண்ணெய்க்கான ஃப்யூச்சர்களின் விலை தரை தட்டத் தொடங்கி இருக்கிறது. அப்படி என்ன சரிவைக் கண்டு விட்டது?
எம் சி எக்ஸ்
இந்தியாவில் எம் சி எக்ஸ் கமாடிட்டி சந்தையில் ஏப்ரல் 2020 மாத கச்சா எண்ணெய் காண்டிராக்டுக்கான விலை 1,417 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 1,590 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. குறைந்தபட்சமாக 1,381 ரூபாயைத் தொட்டு இருக்கிறது.
9 % சரிவு
மேலே சொன்னது போல, இன்று ஒரே நாளில் இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் ஏப்ரல் 2020 காண்டிராக்ட்டின் விலை 9.22 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. இந்த 9 % சரிவு கச்சா எண்ணெய் விலை சரிவை வலுவாக உறுதி செய்வதாகவே இருக்கின்றன.
மே காண்டிராக்ட்
அதே போல மே 2020 மாத காண்டிராக்டும் கொஞ்சம் பலமாகவே சரிந்து இருக்கிறது. இன்று அதிகபட்சமாக 2,095 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. தற்போது மே காண்டிராக்ட், 2,000 ரூபாயைத் தொட்டு இருக்கிறது. இது 5% சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏப்ரல் & மே காண்டிராக்ட் 9 % & 5% சரிவது கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவதைத் தான் உணர்த்துகிறது.
WTI ஃப்யூச்சர்ஸ்
வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் என்று அழைக்கப்படும் WTI கச்சா எண்ணெய் ஃப்யூச்சர் விலை கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 18.05 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்படி, கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய் தட தடவென சரிவதைப் பார்க்கவே கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது.
காரணங்கள்
கொரோனா வைரஸ் கடுமையாக பரவிக் கொண்டு இருக்கும், இந்த காலத்தில், கச்சா எண்ணெய்க்கான டிமாண்ட் குறித்த பயம் அதிகரித்து இருக்கிறதாம். அது தான் கச்சா எண்ணெய் விலையை பாடாய் படுத்திக் கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் சமீபத்தில் தான் ஒபெக்+ நாடுகள் தங்கள் உற்பத்தி குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெட்ரோல் டீசல்
ஏற்கனவே சொன்னது போல ஸ்பாட் பிரண்ட் மற்றும் WTI கச்சா எண்ணெய் விலை 28 & 25 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் காலத்திலும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 72.28 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 65.71-க்கு விற்கிறார்கள். அரசு வரிகளைக் குறைத்து விலையை குறைக்குமா?
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications