தனிஷ்க், ஜோயா, மியா, கேரட்லேன், ஐ-வியர், டைட்டன் ஐபிளஸ் போன்ற நகை பிராண்டுகள், விலை குறைவான பாஸ்ட்ராக், சோனாட்டா ஆகிய பிராண்டுகள் டாடாவுக்கு சொந்தமானவை. ஆனால் இவையெல்லாம் டைடன் என்ற சிங்கிள் பிராண்டின் துணை பிராண்டு என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஜேஆர்டி டாடாவுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு மனிதர் ஒரு பிராண்டை தொடங்கி அது இந்திய சொகுசு தொழிலை புரட்சிகரமாக ஆக்கியது என்றால் வியப்பாக இருக்கும். ஜெர்க்சஸ் தேசாய் என்ற புத்திசாலி மனிதரின் உழைப்பால் டைட்டன் மற்றும் தனிஷ்க் ஆகிய பிராண்டுகள் கார்ப்பரேட் சரித்திரத்தில் புதிய அத்தியாயங்களை படைத்தன.

பம்பாயில் பட்டப்படிப்பு முடித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து தேசாயின் படைப்புத்திறன், வசீகரம், அயராத உழைப்பு மேலும் மேலும் மெருகு கூடியது. டைட்டன் வாட்சுகளின் ஆரம்பக் கால டிவி விளம்பரங்களுக்காக மொசார்ட்ஸ்சின் 25ஆவது சிம்பொனி தயாரிக்கப்பட்டபோது ஜெர்க்சஸ் தேசாயின் படைப்புத் திறன் வெளிப்பட்டது.
அந்த மெலடியை 35 ஆண்டுகள் கழித்து இப்போது நடிகை ஆலியா பட் நடித்து வெளியாகியுள்ள டைட்டன் ராகா விளம்பரத்திலும் கேட்கலாம்.
1980களின் கடைசியில் ஜெர்க்சஸ் தேசாய் இந்தியாவின் முதல் குவார்ட்ஸ் வாட்சை அறிமுகப்படுத்தினார். இதை டாடா சன்ஸின் டைடன் கோ லிமிடெட் தயாரித்திருந்தது.
டைட்டன் கம்பெனி லிமிடெட் 1984 ஆம் ஆண்டில் சென்னையில் டைட்டன் வாட்சஸ் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பல சவால்கள் இருந்தபோதும் குவார்ட்ஸ் அனலாக் எலக்ட்ரானிக் வாட்சுகளில் டைட்டனின் எழுச்சி அபாரமாக இருந்தது. இதிலிருந்து மேலும் பல தயாரிப்புகளை செய்தபின் கம்பெனி டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என்று 1993 ஆம் உருவானது.
இந்த தொடக்கமும் சவால்களை சந்திக்காமல் இல்லை. தேசாயின் முயற்சிக்கு அரசு உடமையான ஹெச்எம்டி வாட்சுகள் பெரும் போட்டியைத் தந்தது. ஆனால் தேசாயின் விடாமுயற்சி இந்திய வாட்ச் தொழிலில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.
டாடா குழுமத்துடன் 1961 ஆம் ஆண்டிலிருந்து தேசாய் பணியாற்றி வந்தார். டாடா அட்மின்ஸ்ட்ரேடிவ் சர்வீஸ் நிறுவனத்துக்கு அவர் தான் மேலாளர். பின்னர் டாடா கெமிக்கல்ஸுடன் அவர் இணைந்தபோது தாஜை பொழிவூட்ட அஜிட் கேக்கருடன் சேர்ந்தார்.
தேசாயின் முக்கியப் பங்குடன் மும்பையில் உள்ள தாஜ் மகால் ஹோட்டல் மிகப் பெரிய அளவில் சீரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. டாடா குழுமத்துக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களில் தாஜ் மகால் ஹோட்டலும் ஒன்றானது. தாஜ் ப்ராப்பர்டிஸின் கோவாவில் உள்ள அகுவாடா கோட்டை, சென்னை தாஜ் கோரமண்டல், உதய்பூரில் உள்ள லேக் பேலஸ் ஆகியவை தேசாயின் கைவண்ணம்.
அவரது பணிக்காலம் முழுவதும் நகர்ப்புறமாக்கலில் ஈடுபாட்டோடு செயல்பட்டார். புறநகர் திட்டமான வாஷியை உருவாக்கியதில் தேசாய் ஆர்க்கிடெக்ட் சார்லஸ் கோரியாவுடன் சேர்ந்து செயல்பட்டார். அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி காலத்தில் நகர்ப்புறமயமாக்கலுக்கான தேசிய ஆணையத்தில் தேசாய் பணியாற்றினார்.
சமூகத்தின் பல்வேறு அம்சங்களை கணக்கிட்டு பல்வேறு நகர்ப்புற வளர்ச்சிக்கும் பொருளாதாரத்துக்கும் உறுதுணையாக இருந்தார்.
அவருக்கு வெஸ்டர்ன் கிளாசிக் மற்றும் ஜாஸ் இசை பிடிக்கும். வேலைக்கு வரும்போது தன்னுடன் இரண்டு நாய்களை அழைத்து வருவார்.
தேசாய் பணிக்காலத்தில் பல சந்தேகங்கள், சவால்கள், எதிர்ப்புகளை சந்தித்தார். இருப்பினும் ஜேஆர்டி டாடாவின் வலுவான ஆதரவு அவருக்குத் தேவையான உந்து சக்தியை தந்தது. தேசாயின் மாறுதல் ஆற்றலில் டாடாவுக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை.
டைட்டன் வாட்ச்களின் டிவி விளம்பரத்துக்காக நடைபெற்ற மொசார்ட்டின் 25 ஆவது சிம்பொனியில் தேசாயின் புத்திசாலித்தனம் வெளியானது.
இந்த இசையின் மூலம் மெலடிக்கும் பிராண்டுக்கும் உள்ள உறவை அவர் நிரூபித்தார். 1994 ஆம் ஆண்டில் டைட்டன் நகையுலகில் அடியெடுத்து வைத்தது. அவர்தான் தனிஷ்க் என்று பெயர் வைத்தார். தன் என்றால் உடல் நிஷ்க் என்றால் தங்க ஆபரணம். இந்த இரண்டுக்கும் இந்திய கலாசாரத்துக்கும் ஆழமான தொடர்பு உண்டு.
இந்த பிராண்டு பெயரையே தங்கள் பிள்ளைகளுக்கு பெயராக வைத்த காலமும் உண்டு. 2001 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான டைட்டன் ஸ்கூல் மற்றும் டைட்டன் டவுன்சிப்புக்கான குடியிருப்போர் என்ற சமூகத்தை தேசாய் அர்ப்பணிப்புடன் தொடங்கினார்.
அவரது அயராத பணிக்காக 1997 ஆம் ஆண்டு சிறந்த சிஇஓ என்ற விருதை பெற்றார். அத்துடன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் மற்றும் பிசினஸ் வேர்ல்டின் வாழ்நாள் சாதனை விருதையும் பெற்றார்.
பெங்களூரில் தேசாய் தனது 79ஆம் வயதில் காலமானார்.
அத்துடன் அவரது சகாப்தம் முடிந்தது. இருப்பினும் டைட்டன் மற்றும் தனிஷ்கின் வெற்றிப் பயணத்தில் அவரது உழைப்பு என்று உயர்ந்து நிற்கும். தொழில் உழைப்பில் தேசாயின் சாதனைகள் ஒரு நிறுவனராக அல்ல ஒரு முன்னோடியாகவே பார்க்கப்படுகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications