உலகமே வியந்து பார்த்த சீனாவின் மாபெரும் பின்டெக் நிறுவனமான ஆன்ட் குரூப்-ன் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ-வை சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரடியாகத் தலையிட்டு அரசு அமைப்புகள் மூலம் திட்டமிட்டுத் தடை விதித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
உலகமே எதிர் பார்த்து வந்த அலிபாபாவின் நிதியியல் சேவை பிரிவு ஆன்ட் குரூப்-ன் 35 பில்லியன் டாலர் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ திடீரெனச் சீன அரசு முடக்கிப் பல கோடி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுமட்டும் அல்லாமல் ஆன்ட் குரூப் 35 பில்லியன் டாலர் ஐபிஓ திட்டத்திற்குச் சுமார் 3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ கோரிக்கை வந்த நிலையில் சீனா, ஹாங்காங் சந்தை முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் அனைத்து முதலீட்டாளர்களும் கவனத்தை ஈர்த்தது.
ஜாக்மா
ஆன்ட் குரூப்-ன் தாய் நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான ஜாக் மா சீன தலைநகர் ஷாங்காய்-ல் நடந்த ஒரு மிகப்பெரிய பின்டெக் மாநாட்டில் Global banking Basel Accords அமைப்பை வயதானவர்களின் கிளப் என்றும், சீனாவில் பைனான்சியல் எகோசிஸ்டம்-ஏ இல்லை என்றும், சீனா வங்கிகள் ஒரு அடகுக் கடை போல் இயங்குகிறது எனப் பல கருத்துக்களை முன்வைத்து சீன அரசை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
ஜி ஜின்பிங்
இதன் பின்பு சீன அதிபர் ஜி ஜின்பிங் சீன சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு விதிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதன் பின்பு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு ஆன்ட் குரூப்-ன் ஐபிஓ-விற்கு சீனா மற்றும் ஹாங்காங்-ல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
ஏழை மக்கள்
ஆன்ட் குரூப் தனது டிஜிட்டல் பேமெண்ட் சேவை தளமான அலிபே-வின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ லோன் எனப்படும் சிறிய அளவிலான கடன் சேவை வழங்கத் துவங்கியது.
இதைத் தான் சீனா அரசு ஏழை மற்றும் இளைஞர்களைக் கடனில் சிக்கவைக்கிறது எனக் குற்றம்சாட்டுகிறது.
மைக்ரோ லோன்
ஆன்ட் குரூப் தனது டிஜிட்டல் பேமெண்ட் சேவை தளமான அலிபே-வின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ லோன் எனப்படும் சிறிய அளவிலான கடன் சேவை வழங்கத் துவங்கியது.
அலிபாபா வளர்ச்சி
சீனாவில் அலிபாபாவின் வளர்ச்சி யாராலும் தடுக்க முடியாத அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், டேட்டா, நிதியியல் சேவை என அனைத்து துறையிலும் தவிர்க்க முடியாத நிறுவனமாக உள்ளது.
ஆதிக்கம்
இந்நிலையில் சீனாவின் அடிப்படையைத் தனது நிதி சேவை மூலம் கட்டமைத்துள்ள உள்ள காரணத்தால் ஆன்ட் குரூப் ஐபிஓ மூலம் வெற்றி அடைந்தால் சீன வங்கிகளின் ஆதிக்கம் பெரிய அளவில் குறையும் என்று திட்டமிட்டு சீன அரசு ஐபிஓ-வை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications