இஸ்ரேல் காசா தாக்குதல், ஈரான் மக்கள் போராட்டம், உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல், தைவான் நாட்டை கட்டம் கட்டி வருகிறது சீனா என கடந்த மாதம் முழுக்க போர் பதற்றத்திலேயே இருந்த உலக நாடுகள், இந்த வாரம் சற்று அமைதியாகியுள்ளது. இந்த அமைதிக்கு பின்னால் சீனா கிங்மேக்கராகும் முயற்சியில் இறங்கியுள்ளது தான் காரணம் என்ற கருத்து நிலவுகிறது.
ஆம், சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொடர்ச்சியாக போன் கால், வீடியோ கால் வாயிலாக உரையாடியுள்ளார். இந்த உரையாடல்கள் ஒரே நாளில் நடந்தது என்பதை சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் அரிதானதும் அரிதானது குறிப்பிடத்தக்கது என கூறுகின்றனர்.

சீனா தன்னை உலகளவில் நிலையான மற்றும் சமநிலையான சக்தியாக காட்டிக்கொள்ளும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. பொதுவாக உலகின் வல்லரசு நாடு, பெரும் சக்தி வாய்ந்த ராணுவம் கொண்ட நாடு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் தான் உலக நாடுகள் மத்தியிலான பிரச்சனையை தீர்த்து வைக்க அடிக்கடி போன் போட்டு பேசுவது வழக்கம்.
ஆனால் தற்போது ஆதிக்கத்தின் ஆர்டர் மாறுகிறது. அமெரிக்காவின் நடப்பு நாடுகள் மற்ற நாடுகளுடன் அதிகப்படியான வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து வருகிறது. இதேபோல் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்கா - ஐரோப்பா மத்தியில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இரு பெரும் பொருளாதார கண்டங்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்த பிளவின் இணைப்பு கயிறாக சீனா மாறியுள்ளது.
புதன்கிழமை மதியம் ஜி ஜின்பிங் புடினுடன் வீடியோ உரையாடல் நடத்தினார். இது 1.5 மணி நேரம் நீடித்தது என்று கிரெம்ளின் வெளியிட்டது. அதே நாளில் சில மணி நேரங்களில் டிரம்புடன் தொலைபேசியில் பேசினார் ஜி ஜின்பிங். டிரம்ப் இந்த உரையாடலை "நீண்ட மற்றும் விரிவானது" என்று கூறினார்.
இதை The Asia Group பார்ட்னர் ஜார்ஜ் சென் "இரு வலிமையான தலைவர்களுடனும் ஒரே நாளில் உரையாடுவது அரிது" என்று கூறினார்.
3 முக்கிய தலைவர்கள் மத்தியிலான உரையாடலில் வர்த்தகம், உக்ரைன் போர், ஈரான் ஆகியவை விவாதிக்கப்பட்டன. இந்த உரையாடல்கள் ஜி ஜின்பிங் புடின் மற்றும் டிரம்புடன் சமநிலையாக நிற்க முயற்சி செய்வதை காட்டுகின்றன என்று சிங்கப்பூர் ராஜரத்னம் சர்வதேச ஆய்வு பள்ளி உதவி பேராசிரியர் பெஞ்சமின் ஹோ கூறினார்.
இதேவேளையில் உலகில் எந்த பிரச்சனை நடந்தாலும், சீனா ஒரு மூலையில் சிக்கக்கொள்ள கூடாது, சுதந்திரமாக செயல்பட வேண்டும் இலக்கை நோக்கி ஜி ஜின்பிங் புடின் மற்றும் டிரம்ப் மத்தியிலான பேச்சுவார்த்தையை துவங்கியிருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சீனா, தற்போது ரஷ்யா மற்றும் அமெரிக்கா மத்தியிலான உறவை சமநிலையில் வைக்கும் பாலமாக அமைகிறது. இது உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் நிலைத்தன்மையை உருவாக்கும்.
குறிப்பாக கச்சா எண்ணெய், உணவு தானியங்கள், தொழில்நுட்பம் போன்றவற்றின் விலை மற்றும் வர்த்தகம் ஆகியவை நிலையாக இருக்க உதவும்.


Click it and Unblock the Notifications