சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, இந்தியாவில் அதன் Mi Financial Services பிரிவை மொத்தமாக மூடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இந்திய வர்த்தகத்தின் மறுசீரமைப்பு மற்றும் மூலோபாய மதிப்பீட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக Mi Financial Services பிரிவை முழுமையாக மூட உள்ளது.
இதன் மூலம் நாட்டின் முக்கிய வணிகப் பிரிவுகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்த உள்ளதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சியோமி
சியோமி இந்தியாவில் தொடர்ந்து முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் நிலையில், பிற தயாரிப்புகளையும் அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இதனால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சந்தையில் சியோமி, ரெட்மி மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.
டிஜிட்டல் வர்த்தகம்
இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு இந்திய மக்களின் தனிநபர் தரவுகள் பாதுகாப்பிற்காகப் பல சீன செயலிகளைத் தடை செய்த நிலையில் சியோமி இதில் இருந்து பெரிய அளவில் தப்பித்தது. ஆனால் இந்தத் தடைக்குப் பின்பு சீன செயலிகள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது மறுக்க முடியாது.
Mi Pay சேவை மூடல்
இந்த நிலையில் சியோமி இந்தியாவில் 2019 இல் Mi Pay ஐ அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் தானும் நுழைய வேண்டும் என்பதற்காக Mi Financial Services பிரிவு Mi Pay ஐ அறிமுகப்படுத்தியது, துவக்கத்தில் Mi Pay 20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றது.
Mi கிரெடிட் சேவை
இந்த வெற்றியை தொடர்ந்து சியோமி நிறுவனம் Mi கிரெடிட் சேவையும் அறிமுகப்படுத்தியது, ஆனால் இதைப் பெரிய மற்றும் முக்கியமான வர்த்தகமாக மாற்ற முடியாத காரணத்தால் Xiaomi India எங்கள் முக்கிய வணிகச் சேவைகளில் கவனம் செலுத்துவதாக அறிவித்து வர்த்தகத்தை மூடியுள்ளது.
ரூ.125 கோடி கடன்
சியோமி நிறுவன தரவுகள் படி, நவம்பர் 2019 வரையிலான சோதனைக் கட்டத்தில் Mi கிரெடிட் மூலம் சுமார் 28 கோடி ரூபாய் அளவிலான தனிநபர் கடன்களை வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து டிசம்பர் 2019-ல் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.125 கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டதாக அறிவித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications