சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஜியோமி, அதன் நிதித் சேவைகளை வழங்கி வரும் ஜியோமி பைனான்ஷியல் சேவையினை இந்தியாவல் நிறுத்தி உள்ளது.
இந்தியாவில் அதன் நிதி சேவையினை தொடங்கிய மூன்று ஆண்டுகளுக்குள் ஜியோமி இத்தகைய முடிவினை எடுத்துள்ளது.
என்ன காரணம்? ஏன் இத்தகைய நடவடிக்கைகளை ஜியோமி எடுத்துள்ளது? இதனால் இந்தியாவுக்கு பிரச்சனையா? வாருங்கள் பார்க்கலாம்.
ஜியோமி நிதி சேவை
ஜியோமி நிதி சேவை நிறுவனம் சமீபத்தில் தான் அதன் Mi பே மற்றும் Mi கிரெடிட் ஆப்களை அதன் சொந்த ஆப் ஸ்டோரில் இருந்தும், லோக்கல் ப்ளோ ஸ்டோரில் இருந்தும் அகற்றியது.
சீனாவினை சேர்ந்த இந்த பிரம்மாண்ட நிறுவனம் ஸ்மார்ட்போன் உள்பட பற்பல சேவைகளை வழங்கி வருகின்றது. உலகம் முழுவதும் இன்றும் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளராக வலம் வந்து கொண்டுள்ளது.
ஜியோமி நிதி சேவை தொடக்கம்
எனினும் அதன் நிதி சேவையில் அதனால் வெற்றிகரமாக அப்படி வலம் வர முடியவில்லை என்றே கூற வேண்டும். கடந்த 2018ம் ஆண்டில் தான் ஜியோமி எம்ஐ நிதித் சேவை பிரிவினை தொடங்கியது. அதன் பிறகு 2019ல் எம் ஐ கிரெடிட் என்ற பெயரை மாற்றியது. அதன் யுபிஐ சேவை மட்டும் அல்ல, கடன் சேவையிலும் குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டது.
இந்தியாவில் தொடக்கம்?
எனினும் மார்ச் 2022ல் தனது Mi பைனான்ஷியல் சேவைகளை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ல் இந்தியாவில் Mi பைனான்ஷியல் சேவைகளை தொடங்கியது. அந்த ஆண்டில் மட்டும் 20 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்கள் இந்த செயலியை கொண்டிருந்தது.
ஏன் வணிகம் நிறுத்தம்
இதற்கிடையில் தற்போது இந்தியாவிலும் அதன் வணிகத்தினை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜியோமி நிறுவனம் அதன் முக்கிய வணிகத்தில் கவனம் செலுத்த உள்ளதாகவும், இதனால் அதன் நிதி சம்பந்தமான வணிகங்களை தடை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து விசாரணைகள்
எனினும் சமீபத்திய மாதங்களாகவே ஜியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது. பலகட்ட விசாரணைகள் நடந்து வருகின்றது. ஜியோமிக்கு சீனாவுக்கு வெளியே இந்தியா மிகப்பெரிய சந்தையாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ஜியோமி நிறுவனம் அதன் வணிக சேவைகளை நிறுத்தியுள்ளது.
வரி ஏய்ப்பு பிரச்சனை
சமீபத்திய விசாரணையில் ஜியோமி இந்தியாவில் பெரியளவில் வரி ஏய்ப்பு செய்தது அம்பலமானது. இதன் மூலம் ஜியோமி மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளையும் எடுத்தது. குறிப்பாக ஜியோமியின் 676 மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது. மேலும் ஜியோமி இந்தியா நிறுவனம் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பிய போது, வங்கிகளிடமும் தவறான தகவல்களை கூறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தான் காரணமோ?
இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஜியோமியின் இந்த முடக்க நடவடிக்கைகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
நீடிக்கும் குழப்பம்
ஜியோமி நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. மேலும் நாங்கள் எங்களின் நல்ல பெயரை மீட்க நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அதன் நிதி வணிகத்தினை முடக்கி இருப்பது பற்பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications