இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்தியாவில் சுமார் 96,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 3,000 பேர் இறந்து இருக்கிறார்கள்.
இப்படி கொரோனா ஒரு பக்கம் மக்களின் உயிரை வாங்க்விடுவேன் என பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்றால், மறு பக்கம் மக்களின் பொருளாதார வாழ்கையை கேள்விக்குறியாக்கிக் கொண்டு இருக்கிறது.
புலம் பெயர் தொழிலாளர்கள்
அதிலும் குறிப்பாக, நம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு சாப்பிட உணவு இல்லை, சம்பாதிக்க வேலை இல்லை, கையில் போதுமான காசு இல்லை. தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு வந்துவிட்டதால், பெரிய அளவில் சொந்த பந்தங்களின் உதவியும் கிடைக்கவில்லை.
கண்ணீர் பயணம்
எனவே, புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்துடன், ஏதோ ஒரு நம்பிக்கையில், பல நூறு கிலோமீட்டர்களை நடந்தே கடக்கத் தொடங்கிவிட்டார்கள். பார்ப்பவர்களின் மனதை உருக்கும் இந்த பயணத்தில், பல புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் உயிரையே விட்டுவிட்டார்கள் என்பதெல்லாம் நம்மை சோகத்தில் ஆழ்த்தும் செய்தி.
தூளி
இருப்பினும் புலம் பெயர் தொழிலாளர்கள், தொடர்ந்து தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடை பயணமாக பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு தந்தை, தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் ஒரு குச்சியின் இரு புறங்களிலும், தூளி போல கட்டி, அதில் தன் இரு குழந்தைகளையும் வைத்து, தன் சொந்த ஊருக்கு நடந்து கொண்டிருந்த காட்சி இணையத்தில் வெளியானது.
சியாமி தலைவர்
இந்த காட்சி, 39 வயதான, சியாமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு குமார் கண்ணில் பட்டிருக்கிறது. அந்த தந்தை, குழந்தைகளை தன் தோலில் சுமந்து கொண்டு பயணிக்கும் படத்துடன், தன் ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்தைப் பதிவுச் செய்து இருக்கிறார்.
அவர் ட்விட்
"என் மனம், புலம் பெயர் தொழிலாள சகோதர சகோதரிகளுக்காக வருந்துகிறது. உணவு இல்லை, தண்ணீர் இல்லை. தங்கள் சொந்த ஊரை நோக்கி, மிக நீண்ட கொடுமையான பயணத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்த காட்சியைப் பார்த்து நான் கிட்டத்தட்ட அழுதுவிட்டேன்" என மிகவும் உருக்கமாக ட்விட் செய்து இருக்கிறார்.
ஐடியா ப்ளீஸ்
அதோடு "ஒரு தந்தையாக, நானும் இதைத் தான் செய்து இருப்பேன். இந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என ஏதாவது ஐடியா சொல்லுக்கள்" எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் கேட்டு இருக்கிறார். உங்களுக்கு தோன்றும் ஐடியாக்களை அவரிடம் பகிர்ந்து கொள்ளுங்களேன். மனு குமாரின் ட்விட்டைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications