இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எப்படி சியோமி மலிவான விலையில் பல மாடல் போன்களை அறிமுகம் செய்து இந்தியாவின் பெரும் பகுதி வர்த்தக சந்தையை கைப்பற்றி ஒரு காலத்தில் ஆட்சி செய்ததோ, அதேபோல் ஹோம் அப்ளையன்ஸ் துறையில் தனது ஆதிக்கத்தை காட்ட Mijia என்ற பிராண்டை அறிமுகம் செய்ய உள்ளது.
சியோமி கீழ் இயங்கும் ரெட்மி, போகோ ஆகியவை ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வேளையில் தற்போது இந்திய வீடுகளின் சமையல் அறை அலங்கரிக்க Mijia வர உள்ளது.

சீனாவில் மிகவும் பிரபலமான ஹோம் அப்ளையன்ஸ் பிராண்டாக இருக்கும் Mijia அறிமுகம் செய்வது மூலம் இந்தியாவில் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி திரும்பியுள்ளது.
Mijia அறிமுகத்தின் மூலம் சியோமி தனது இந்திய வர்த்தகத்தை ஸ்மார்ட்போன், டிவி போன்றவற்றை தாண்டி புதிய துறையில் இறங்கியுள்ளது. Mijia பிராண்டின் கீழ் வாசிங் மெஷின், பிரிட்ஜ், வேக்கம் கிளீனர், ஓவன், மிக்சி, கிரைன்டர், ஜூசர், கெட்டில், காஃபி மேக்கர் என வீட்டின் சமையலறைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இதில் உள்ளது.
சியோமி மட்டும் அல்லாமல் சீனா கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகள் அனைத்தும் 2020 முதல் மத்திய அரசின் நெருக்கடி காரணமாகவும், மக்கள் மத்தியில் ப்ரீமியம் போன்களுக்கு மாறியதன் காரணமாகவும் அதன் வர்த்தகத்தையும், ஆதிக்கத்தையும் இழந்து வருகிறது. இந்த நிலையில் தான் சியோமி Mijia மூலம் இழந்த இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
Mijia இந்தியாவில் நீண்ட கால திட்டத்துடன் இறங்கியுள்ளது மட்டும் அல்லாமல் உள்நாட்டு உற்பத்தி திட்டத்துடனும் வந்துள்ளது. ஏற்கனவே சியோமி Home என்ற பிரிவின் கீழ் பல பொருட்களை விற்பனை செய்து வரும் வேளையில் தற்போது பெரிய வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.
சியோமி இந்தியாவில் இதன் வர்த்தகத்தில் தடுமாற்றத்தை கண்டாலும் சீனாவில் பெரும் புரட்சி செய்து வருகிறது, வெறுமனே ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை மட்டுமே தயாரித்து வந்த இந்நிறுவனம் 2023ல் முக்கியமான முடிவை எடுத்தது. எலக்ட்ரிக் கார் தயாரிப்பு.
பல வருட திட்டமிடல், ஆராய்ச்சி, டிசைன் என பெரும் போராட்டத்திற்கு பின்பு சியோமி அடுத்தடுத்து கார்களை அறிமுகம் செய்து பெரும் வெற்றியை கண்டுள்ளது. முதல் காரான SU7 அதிதிறன் வாய்ந்த காராக இருந்த காரணத்தால் டெஸ்லா கார்களுக்கே போட்டியாக இருHuman × Car × Home smart ecosystem ஆக மாறிவருகிறது.


Click it and Unblock the Notifications