சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் விற்பனை சந்தையில் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
சியோமி நிறுவன
சியோமி நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை அளவு கடந்த ஒரு வருடத்தை விடவும் 84 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஆன்லைன் விற்பனை சந்தையில் சுமார் 40 சதவீத சந்தையைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது.
இதோடு ஆப்லைன் வர்த்தகச் சந்தையில் 3வது இடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தைச் சியோமி ஜூன் காலாண்டில் முன்னேறியுள்ளது.
சியோமி விற்பனை
சியோமி இந்த ஜூன் காலாண்டில் சுமார் 70 சதவீத வர்த்தகத்தை ஆன்லைன் வர்த்தகப் பிரிவுகள் வாயிலாகவும், 18 சதவீத வர்த்தகத்தை ஆப்லைன் ரீடைல் கடைகள் மூலம் பெற்றுள்ளது.
போகோ பிராண்ட்
இதுமட்டும் அல்லாமல் இக்காலாண்டில் சியோமி நிறுவனத்தின் கிளை பிராண்ட் ஆன போகோ இந்தியாவிலேயே வேகமாக வளரும் பிராண்டாக உருவெடுத்துள்ளது. மேலும் போகோ பிராண்டில் விற்பனை செய்ய அதிகளவிலான பொருட்களும் இல்லை, அதேவேளையில் ஆன்லைன வர்த்தகம் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஐடிசி தரவுகள்
ஐடிசி (IDC) வெளியிட்ட தரவுகள் படி டாப் 10 சாம்சங் பிராண்டில் சாம்சங் நிறுவனம் தான் மிகவும் குறைவான வருடாந்திர வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனாலும் மொத்த வர்த்தகச் சந்தையில் 2வது இடத்தில் உள்ளது.
சாம்சங் நிறுவனம்
சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகச் சந்தை பாதிப்பிற்கு மிக முக்கியக் காரணம் சப்ளை செயின்-ல் ஏற்பட்ட சரிவு தான். இதனால் சாம்சங் நிறுவனத்தின் வருடாந்திர வளர்ச்சி 15 சதவீதமாக மட்டுமே உள்ளது.
விவோ
3வது இடத்தில் இருக்கும் விவோ பிராண்ட் ஜூன் காலாண்டில் சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்து வருடாந்திர வளர்ச்சி அளவீட்டில் 57 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் சந்தை வர்த்தகம் இரண்டுமே சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications