சீனாவின் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi, தனது வர்த்தகத்தை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் துறையில் இருந்து மாற்றி, எலக்ட்ரிக் வாகன பிரிவுக்கு சென்றது உலகளவில் வியந்து பார்க்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் சியோமி அறிமுகம் செய்த SU7 எலக்ட்ரிக் சூப்பர் கார் உலகளவில் போற்றப்பட்ட நிலையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் தனது திட்டங்களை விளக்கியுள்ளது.
சியோமி இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய ஒரு நிறுவனம், வெறும் 5000 - 6000 ரூபாய்க்கு தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து பெரும் வர்த்தக சந்தையை கைப்பற்றி இந்தியாவில் பியூச்சர் போன் சந்தையை துடைத்து எடுத்தது சியோமி. இதன் வெற்றியை பார்த்து தான் பின்னாளில் ஓப்போ, விவோ, ஓன்பிளஸ் போன்றவை வந்தது.

இதேபோல் எலக்ட்ரிக் கார் விற்பனை சந்தையிலும் சியோமி தனது புதிய காரான SU7 எலக்ட்ரிக் சூப்பர் காரை வைத்து மேஜிக் செய்யும் என எதிர்பார்ப்பு இந்திய மக்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. இப்படி சியோமி இந்தியாவுக்கு SU7 காரை கொண்டு வந்தால் மஹிந்திரா, டாடா, எம்ஜி போன்ற நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சியோமி SU7 எலக்ட்ரிக் சூப்பர் கார் பெங்களூரில் காட்சிப்படுத்தப்பட்டாலும், இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்த திட்டங்கள் இல்லை என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மஹிந்திரா, டாடா, எம்ஜி போன்ற நிறுவனங்களுக்கு நம்மதி அளித்துள்ளது.
Xiaomi India-யின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரியான அனுஜ் சர்மா, ஆட்டோமொபைல் சந்தையின் சிக்கல்கள் மற்றும் சீன சந்தையில் நிறுவனத்தின் கவனம் செலுத்தி வருவதால் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான திட்டம் இல்லை என விளக்கினார்.
இந்தியா உட்பட எந்தவொரு உலகளாவிய விரிவாக்கத்தையும் செய்யும் முன், Xiaomi சந்தை வாய்ப்புகளையும், நுகர்வோர் விருப்பங்களையும் மதிப்பிடுவதற்கு விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மேற்கொள்ளும். இதை இன்னும் சியோமி துவங்கவில்லை என்பதையும் அனுஜ் சர்மா தெரிவித்துள்ளார்.
SU7 அல்லது Speed Ultra என்றும் அழைக்கப்படும் இந்த சூப்பர் எலக்ட்ரிக் கார் சீன மக்கள் மத்தியில் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ள ஒரு ஃப்ளாக்ஷிப் எலக்ட்ரிக் செடான் காராகும். இது சக்திவாய்ந்த மின் மோட்டார், நீண்ட தூர பேட்டரி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. 30,000 டாலருக்கும் குறைவான விலையில் சியோமி கார்கள் அறிமுகமாகியுள்ளது, அதாவது 25 லட்சம் ரூபாய் அளவில் அறிமுகமாகியுள்ளத.
சியோமி நிறுவனம் ஆண்டுக்கு 200,000 வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டு அந்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் BAIC குழுமத்தின் தொழிற்சாலை உடன் இணைந்து தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications