இந்திய உற்பத்தி சந்தை முடங்கியது.. இறக்குமதியில் இறங்கிய சீன நிறுவனங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டது, இதனால் வர்த்தகச் சந்தை முழுவதுமாக முடங்கிச் சாமானியர்கள் வேலைவாய்ப்பும், வருமானமும் இல்லாமல் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வந்தனர்.

 

இதனால் நாட்டின் பொருளாதார நடவடிக்கையைப் படிப்படியாகத் துவங்கத் திட்டமிட்ட மத்திய அரசு லாக்டவுனில் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்தது. இதன் வாயிலாக மீண்டும் உற்பத்தி சந்தை துவங்கினாலும் ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சில தொழிற்சாலை மீண்டும் மூடப்பட்டும், ஊழியர்கள் பற்றாக்குறை எனப் பல தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு மிகவும் குறைவான அளவிலேயே உற்பத்தி இருந்தது.

இதனால் வர்த்தகத்திற்குப் போதுமான உற்பத்திகள் இந்தியாவில் ஈடு செய்ய முடியாத நிலையில் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் சீன மொபைல் நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகச் சீனாவில் இருந்து மொபைல்களை இறக்குமதி செய்யத் துவங்கியுள்ளது.

பலத்த அடி வாங்கிய இந்தியா.. ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு வரலாம்.. காரணம் இந்த கொரோனா தான்..!

சியோமி மற்றும் ஓப்போ

சியோமி மற்றும் ஓப்போ

இந்தியாவில் சியோமி மற்றும் ஓப்போ நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் assembly தொழிற்சாலையை வைத்திருக்கும் நிலையிலும், போதிய உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவில் சில முக்கிய ஸ்மார்ட்போன் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்திய தொழிற்சாலைகள்

இந்திய தொழிற்சாலைகள்

சியோமி இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருக்கும் தொழிற்சாலையில் அசம்பிள் செய்து ஸ்மார்ட்போன் செய்கிறது. இதேபோல் ஓப்போ டெல்லிக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலையில் ஸ்மார்ட்போன்களை அசம்பிள் செய்கிறது.

இத்தொழிற்சாலைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் இவ்விரு நிறுவனங்களும் விற்பனை செய்கிறது.

இறக்குமதி
 

இறக்குமதி

சீன நிறுவனங்கள் எத்தனை ஸ்மார்ட்போன்கள் இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறித்த தகவல் முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், இறக்குமதி செய்யப்படும் செய்தி உறுதியாகியுள்ளது.

இந்த முடிவு உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாத காரணத்தால் மட்டுமே செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிமாண்ட்

டிமாண்ட்

இந்தியாவில் தற்போது ஸ்மார்ட்போன்களின் டிமாண்ட் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் பெரிய அளவிலான இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்ரோன்களின் எண்ணிக்கையும் குறைவாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி

சியோமி

இந்தியாவில் வர்த்தகச் சந்தை முழுவதுமாக மீளவில்லை என்றாலும் சியோ இன்று புதிதாக ஒரு லேப்டாப்-ஐ விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு சிறபம்சங்கள் கொண்ட இந்த லேப்டாப் பெயர் Mi NoteBook 14. இந்த லாப்டாப் 54,999விலையிலும், 59,999 விலையிலும் 2 மாடல்களாக அறிமுகம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: xiaomi oppo coronavirus foxconn
English summary

Xiaomi, Oppo turn to imports for India as local Chinese plants struggle

China's Xiaomi and Oppo have had to resort to importing some smartphones models into India as their local assembly plants struggle to get back to normal production levels. The bulk of the Xiaomi smartphones sold in India are made by contract manufacturer Foxconn in the southern states of Tamil Nadu and Andhra Pradesh, while Oppo assembles its India-made phones at a plant on the outskirts of New Delhi.
Story first published: Thursday, June 11, 2020, 20:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X