ஸ்மார்ட்போன் உலகில் கொடிகட்டிப் பறக்கும் சியோமி நிறுவனம், எலக்ட்ரிக் கார் துறையில் நுழைவதாக அறிவித்த நாளில் இருந்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் ஸ்மார்ட்போன் விற்பனையில் எப்படி குறைவான விலையில் விற்பனை செய்ததோ அதேபோல் கார் விற்பனையிலும் புரட்சி செய்யும் என்ற எதிர்பார்ப்பு தான்.
இந்த நிலையில் சியோமி தனது முதல் எலக்ட்ரிக் காரை சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்திய நிலையில், இதன் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் முதல் முறையாக விலையை அறிவித்துள்ளார்.

எஸ்யூ7 (SU7) என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எலக்ட்ரிக் கார், ஸ்டைலான தோற்றம், எளிதான ஓட்டுநர் அனுபவம், அதிநவீன ஸ்மார்ட் ஃபீச்சர்கள் என அனைத்தையும் கொண்டிருக்கும் வேளையில், இதை Tesla, Porsche கார்களுக்கு இணையான ஆடம்பரம் மற்றும் திறன் கொண்டு இருப்பதாகக் கூறப்பட்டு உள்ளது.
பொதுவாக எலக்ட்ரிக் கார் என்றாலே விலை அதிகம் தான், அதிலும் ஆடம்பர எலக்ட்ரிக் கார் என்றால் கேட்கவா வேண்டும். உதாரணமாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை பாருங்க.
இந்த நிலையில் சியோமி தனது ஆடம்பர எலக்டரிக் காரை 5 லட்சம் யுவான் (தோராயமாக ₹70 லட்சம்) என்ற மலிவு விலையில் கிடைக்கும் எனவும் லெய் ஜூன் தெரிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையைப் புரட்டிப்போடும் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வார இறுதியில் எஸ்யூ7 கார்களுக்கான முன்பதிவுகள் தொடங்கவுள்ளன சியோமி, டெஸ்லா மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களுக்கு இணையான திறன் கொண்ட பேட்டரியுடன் எஸ்யூ7 வரும் என லெய் ஜூன் அறிவித்துள்ளார்.
எஸ்யூ7 இரண்டு மாடல்களில் கிடைக்கும், ஒரு முழு சார்ஜில் 668 கி.மீ (415 மைல்) தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட ஸ்டாண்டர்ட் மாடல், மற்றொன்று ஒரு முழு சார்ஜில் 800 கி.மீ (500 மைல்) தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட ஹைய் என்ட் மாடல். இது டெஸ்லா மாடல் எக்ஸை காட்டிலும் அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் மந்த நிலை ஏற்பட்டு வரும் சூழலில், சீனாவின் ஐந்தாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி, தனது வியாபாரத்தை எலக்ட்ரிக் கார் துறைக்கு விரிவாக்கம் செய்து வருகிறது. 2021 ஆம் ஆண்டில் முதன் முதலில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது குறித்து அறிவிக்கப்பட்டது.
ஹூவாய், பைடு போன்ற சீன தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, சியோமி தனது தொழில்நுட்பத் திறனை எலக்ட்ரிக் கார் துறையில் பதிப்பிக்க இலக்கு வைத்துள்ளது. சொல்லப்போனால் ஹூவாய் AITO M5, Luxeed S7, Avatr ஆகிய 3 பிராண்டுகளில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் Luxeed S7, Avatr பிராண்டுகள் ஹூவாய் தனது எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பத்தை Chery Auto மற்றும் Changan Automobile ஆகியவற்றுக்குப் பகிர்ந்து கார்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்த 3 ஹூவாய் தொழில்நுட்ப கார்களும் 200,000 முதல் 500,000 யுவான் மதிப்பில் தான் விற்கப்படுகிறது. இந்தியாவில் விற்கப்படும் எலக்ட்ரிக் கார்கள் வரும் அடிப்படை பணிகளை மட்டுமே செய்யக்கூடியவை, ஆனால் இந்த கார்கள் அனைத்தும் பர்பாமென்ஸ் கார்கள், ஆடம்பர கார்கள். இந்த கேட்டகரியில் இந்தியாவில் விற்கப்படும் கார்கள் Hyundai Ioniq 5 அதுவும் ரியர் வீல் டிரைவ் மட்டுமே கொண்டது, இதன் விலை 48 லட்சம் ரூபாய்.
ஹூவாய், சியோமி காரை கொஞ்சம் பாருங்க அப்புறம் சொல்லுங்க.


Click it and Unblock the Notifications