இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக சியோமி டெக்னாலஜி நிறுவனம் இருக்கிறது. சீனாவை தலைமை இடமாக கொண்ட இந்த நிறுவனம் இந்தியாவில் சியோமி டெக்னாலஜி இந்தியா என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் முதலிடத்தில் இருந்த சியோமி படிப்படியாக அந்த இடத்தை இழந்துவிட்டது. இந்தியாவில் சியோமி டெக்னாலஜி நிறுவனத்திற்கு சொந்தமான 4704 கோடி ரூபாய் பணம் வங்கிகளில் முடக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வரும் சியோமி நிறுவனம் செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் சியோமி டெக்னாலஜி நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக சியோமி டெக்னாலஜி நிறுவனத்திற்கு சொந்தமான சில வங்கி கணக்குகளை அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால் 4,704 கோடி ரூபாயை அதில் இருந்து எடுக்க முடியாமல் தவித்து வருகிறது.
வருமான வரித்துறை விசாரணை, வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை, அமலாக்கத்துறை விசாரணை என பல்வேறு விசாரணைகளை சியோமி நிறுவனம் எதிர்கொண்டிருக்கிறது. வருமான வரி இறக்குமதி வரி மற்றும் வெளிநாட்டு பரிவர்த்தனை விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சியோமி நிறுவனம் இந்த வழக்குகளை எதிர் கொண்டிருக்கிறது .
இதன் காரணமாக சியோமி டெக்னாலஜி நிறுவனத்தின் வங்கி கணக்குகளை இந்த அமைப்புகள் முடக்கி வைத்திருக்கின்றன. இதனால் 4,704.21 கோடி ரூபாயை எடுக்க முடியாமல் சியோமி நிறுவனம் தவித்து வருகிறது. முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்கான தங்களின் வருவாய் விவரங்களை வெளியிட்ட சியோமி நிறுவனம் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் மீதான வழக்குகள் விசாரணை அளவில் இருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்திருந்தது.
இந்த வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக தங்களுடைய பண பரிமாற்றம் தடைப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. சியோமி நிறுவனம் மொபைல் போன்களின் கொள்முதல் செலவுகள் மற்றும் மூன்றாம் தரப்பினருக்கு செலுத்திய பணத்தை முறையாக குறிப்பிடவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணை முடிவடையும் வரை வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை பயன்படுத்த முடியாத நிலையில் சியோமி இருக்கிறது.
இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் சியோமி நிறுவனம் 12 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் விவோ நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது, இரண்டாவது இடத்தில் சாம்சங்கும், மூன்றாவது இடத்தில் ஓப்போ நிறுவனமும் இருக்கின்றன. நான்காவது இடத்தில் சியோமி இருக்கிறது. 2024ஆம் ஆண்டில் இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தையில் தங்கள் விற்பனையில் 26 சதவீதம் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications