சீன மொபைல் நிறுவனங்களின் புதிய திட்டம்.. இந்திய மக்களின் நிலைப்பாடு என்ன..?!

இந்திய எல்லையில் சீனா- இந்தியா ராணுவ வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின் இரு நாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியது. அதன் பின்பு இரு நாட்டு அரசுகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சீன படைகள் பின்வாங்கியது, இதனால் கல்வான் எல்லையில் இருந்த பற்றமான சூழ்நிலை சற்று தனிந்துள்ளது.

இதற்கிடையில் இந்திய அரசு மக்களின் தனிநபர் தகவல் பாதுகாப்புக் காரணமாக இந்தியாவில் பிரபலமாக இருக்கும் சீன செயலிகளைத் தடை செய்தது. இதுமட்டும் அல்லாமல் மக்களுக்கும் கல்வான் எல்லையில் நடந்த தாகுதலில் இந்திய ராணுவ வீரர்கள் பல வீர மரணம் அடைந்த நிலையில் மக்களும் சீன பொருட்களைத் தடை செய்ய வேண்டும், யாரும் சீன பொருட்களை வாங்கக் கூடாது எனச் சீன பொருட்களுக்கும், சேவைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் சந்தை வர்த்தகத்திற்கு வர சியோமி, விவோ, ஹையர், ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் புதிய திட்டம் தீட்டி வருகிறது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இந்தியாவில் தற்போது சீன பொருட்களுக்குக் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில், மக்களின் நம்பிக்கையைத் திரும்பவும் பெற சியோமி, விவோ, ஹையர், ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் 'மேக் இன் இந்தியா' பெயரில் விளம்பரம் செய்யவும், மார்க்கெட்டிங் பிரிவில் மிகப்பெரிய அளவிலான முதலீடு செய்யவும் திட்டமிட்டு வருகிறது.

தாமதம்

தாமதம்

இந்தியாவில் தற்போது சீன நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பொருட்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையிலும், விழாக்கால விற்பனைக்குத் தயாராகவும், வர்த்தகம் விரிவாக்கத்திற்காகப் புதிய முதலீடுகளைச் செய்யவும் தயாராக உள்ளது. இரு நாட்டு எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையால் பல தயாரிப்புகள் அறிமுகம் செய்யாமல் கிடப்பில் போட்டது குறிப்பிடத்தக்கது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

சீனாவின் பல நிறுவனங்கள் இந்தியாவில் தயாரிப்பதால், தற்போது பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதை முன்னிறுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க மேக் இன் இந்தியா-வை மையப்படுத்தி விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள், பேக்கிங் முறையை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சீன நிறுவனங்கள்.

விளம்பரங்கள்

விளம்பரங்கள்

விவோ, சியோமி, ஓப்போ, ரியல்மி, ஒன்பிளஸ் ஆகியவை ஏற்கனவே புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவும், புதிய பிரிவில் புதிய பொருட்களை அறிமுகம் செய்யவும் துவங்கியுள்ளது.

மேலும் Haier அடுத்த மாதம் வரும் ஓணம் பண்டிகையில் இருந்து விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் பணிகளைத் துவங்கத் திட்டமிட்டுள்ளது.

 

2,500 கோடி ரூபாய்

2,500 கோடி ரூபாய்

சீனா ஸ்மார்போன் மற்றும் எலக்ட்ரானிக் பிராண்டுகள் இந்திய வர்த்தகத்திற்காக வருடத்திற்குச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்து வருகிறது.

சீன பொருட்களின் ஆதிக்கம்

ஜனவரி - மார்ச் காலாண்டில் நிலவரப்படி ஸ்மார்ட்போன் பிரிவில் சீன நிறுவனங்கள் 80 சதவீதமும், ஸ்மார்ட்டிவி பிரிவில் 40 சதவீதமும், ஹோம் அப்லையன்ஸ் பிரிவில் 6 முதல் 7 சதவீதமும் ஆதிக்கம் செலுத்துகிறது.

 

மக்கள் மனநிலை

மக்கள் மனநிலை

சீன நிறுவனங்களின் இந்த மேக் இன் இந்தியா விளம்பரம் மூலம் மக்களின் மனநிலையை மாற்ற முடியுமா..? கல்வான் தாக்குதலை மறந்து சீன பொருட்களைத் திரும்பவும் வாங்குவார்களா..?

மக்களாகிய நீங்கள் உங்கள் கருத்தை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+