இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையை எளிதாக்கி, மக்களுக்கு வேகமாகவும், மேம்பட்ட தரத்தில் மலிவு விலையில் கிடைக்க செய்த ஒரு நிறுவனம் சீனாவின் சியோமி. ஸ்மார்ட்போன் என்றால் 10000, 20000 ரூபாய் அளவில் விற்பனை செய்துக்கொண்டு இருக்கும் போது வெறும் 5000, 6000 ரூபாய் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து இந்திய மக்களின் நம்பிக்கை பெற்றது சீனாவின் சியோமி. இந்த மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது மனு ஜெயின்.
இந்தியாவில் சியோமி-யின் தலைவராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து அதன் அறிமுகம், சப்ளை செயின், மார்கெட்டிங் என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயக்கி இந்திய சந்தையில் பெரும் ஆதிக்கத்தை பெற்றது சியோமி. ஆனால் சில வருடங்களுக்கு முன் பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் மனு ஜெயின் சியோமி நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

இவருடைய வெளியேற்றத்திற்கு பின்பு சியோமி பல சவால்களை இன்று வரையில் சந்தித்து வருகிறது, சந்தையில் தனது ஆதிக்கத்தையும் இழந்துவிட்டது. இந்த நிலையில் மனு ஜெயின் என்ன செய்கிறார் என்ற கேள்வி அவ்வபோது கார்ப்ரேட் வாட்டாரத்தில் ஒலிக்கும். இந்த கேள்விக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
அபுதாபியை தளமாகக் கொண்ட G42 என்ற தொழில்நுட்ப நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருகிறது. 2018-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், மத்திய கிழக்கில் மிகவும் விரிவான AI சேவைகளை வழங்கும் நிறுவனமாக உள்ளது.
G42 நிறுவனம் தனது ஏஐ சேவையை சுகாதாரம், பருவநிலை அறிவியல், விண்வெளி ஆய்வு மற்றும் உயர் செயல்திறன் கணினி (high-performance computing) போன்ற பல துறைகளில் பயன்படுத்தி ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் புதிய ஏஐ பவர் ஆக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில காலாண்டுக்காக G42 நிறுவனம் இந்தியாவை தனது மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டார மாற்ற முயற்சிக்கிறது, இது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் என நம்புகிறது. இந்த நம்பிக்கையும், இந்தியா மீது கவனத்தை திருப்ப முக்கிய காரணமாக இருப்பவர் மனு ஜெயின்.
ஆம், G42-ன் இந்திய பயணத்தை வழிநடத்துபவர் மனு ஜெயின் ஆவார். இவர் இந்தியாவின் பிரபல தொழில்நுட்ப முகங்களில் ஒருவர் என்பதாலும், சியோமி (Xiaomi) நிறுவனத்தை இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் பிராண்டாக உருவாக்கியவர் என்பதால் அப்ரேஷனில் இவர் சூப்பர்ஸ்டார் ஆக விளங்குகிறார்.
2023 அக்டோபரில் மனு ஜெயின் G42 இந்தியாவின் CEO ஆக நியமிக்கப்பட்ட பிறகு, இந்நிறுவனத்தின் இந்திய திட்டத்தை வெறும் பரிந்துரை என்ற நிலையிலிருந்து செயல்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளார். இதுக்குறித்து மனு ஜெயின் கூறுகையில் "மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனத்தை உருவாக்கிய பிறகு, AI மூலம் உண்மையான தாக்கத்தை உருவாக்க இந்தியா வந்துள்ளோம்," என மனு ஜெய்ன் தெரிவித்தார்.
G42 மற்றும் மனு ஜெயின் மூலம் இந்தியாவின் ஏஐ துறை வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் இந்திய அரசும் உலகளாவிய AI துறை புரட்சியை பயன்படுத்த திட்டம் தீட்டி வருகிறது.
மத்திய அரசு Large Language Models - LLMs மற்றும் அட்வான்ஸ் கம்பியூட்டிங் திறனின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2024-ல் 10,300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியா AI மிஷனை அறிவித்தது. இது உள்நாட்டு AI உள்கட்டமைப்பு, புதிய மாடல்கள் மற்றும் அனைவருக்கும் ஏஐ கட்டமைப்பை அணுகுவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு இத்திட்டத்தை உருவாக்கியது.
இதோடு மத்திய அரசு 15,000 மேம்பட்ட GPU-களை வாங்க ஏழு நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது, இது உள்நாட்டு AI கம்பியூட்டிங் திறனை மேம்படுத்துவதற்கு உதவும். இந்தியாவின் AI உள்கட்டமைப்பு வலுவடைந்து வருவதாக கேபிஎம்ஜி நிறுவனத்தின் டிஜிட்டல் உத்தி தலைவர் சுஷாந்த் ரப்ரா கூறினார்.
சுஷாந்த் ரப்ரா இந்தியாவின் AI துறை வளர்ச்சி குறித்து கூறுகையில் "தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷன், GPU பூங்காக்கள், இன்டிபென்டென் AI கம்பியூட்டிங் திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆதரவு ஆகியவற்றால் ஏஐ துறைக்கான அடித்தளம் வலுவடைகிறது." என தெரிவித்தார். இந்த சூழல் G42 போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் செயல்பட ஒரு வாய்ப்பாக அமைகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications