தொழில் துறையின் மையமாக விளங்கும் கோயம்புத்தூரில், தனுஷ் பக்தா என்ற 25 வயது இளம் தொழில்முனைவோர் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளார். இவரது 'எக்ஸ் லாஜிக் லேப்ஸ்' (xLogic Labs) நிறுவனம், மனிதர்கள் யாரும் இல்லாமல், முழுவதுமாக ரோபோக்களை கொண்டே பொருட்களை உற்பத்தி செய்யும் 'டார்க் ஃபேக்டரி'களை உருவாக்கி வருகிறார்.
"டார்க் ஃபேக்டரி" என்பது முழுமையான தானியங்கி உற்பத்தி வசதி ஆகும். இது குறைந்தபட்ச மனிதர்கள், வெளிச்சம் இல்லாமலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெளிச்சம் இல்லாமலும் செயல்படும். இந்த "லைட்-ஆஃப்" வசதிகள் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ், AI மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) ஆகியவற்றைப் பயன்படுத்தி மூலப்பொருள் விநியோகம் முதல் முடிக்கப்பட்ட தயாரிப்பு வெளியீடு வரை முழு உற்பத்தி செயல்முறையையும் நிர்வகிக்கின்றன, இது அதிகரித்த செயல்திறன் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிலிக்கான் வேலியில் கற்றப் பாடம் : சிறுவயது முதலே ரோபோக்கள் மீது ஆர்வம் கொண்ட தனுஷ், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது ஒரு விஷயத்தை கவனித்தார். பழைய தொழிற்சாலைகளில் ரோபோக்களை பொருத்தி, அதை நவீனமயமாக்குவது மிகவும் கடினமான வேலை. அதனால், அதைவிட, ஆரம்பம் முதலே ரோபோக்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு புதிய, தானியங்கி தொழிற்சாலையை உருவாக்குவதுதான் சுலபம் என்று தனுஷ் முடிவெடுத்தார். அந்த யோசனையில்தான் 'எக்ஸ் லாஜிக் லேப்ஸ்' பிறந்தது.

தனுஷின் இலக்கு என்ன..?: எப்படி நாம் அமேசான் வெப் சர்வீஸ் (AWS) மூலம் கம்ப்யூட்டர் சர்வர்களை வாடகைக்கு எடுக்கிறோமோ, அதேபோல உற்பத்திக்கு தேவைப்படும் ரோபோக்களையும் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்றவாறு பணம் செலுத்தி வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். இதனால், சிறிய நிறுவனங்கள் கூட, கோடிக்கணக்கில் முதலீடு செய்து தனியாக ஒரு தொழிற்சாலையை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.
15 நாட்களிலேயே ரூ. 1 கோடி வருவாய் : வாடிக்கையாளர்கள் தங்கள் தயாரிப்பின் வடிவமைப்பை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் போதும். எக்ஸ் லாஜிக் நிறுவனத்தின் மென்பொருள், அந்தப் பொருளை உற்பத்தி செய்ய முடியுமா என்று உடனே சொல்லிவிடும். பிறகு, அதன் ரோபோக்கள் தாங்களாகவே பணிகளைப் பிரித்துக் கொண்டு, அதிவேகமாக வேலை செய்து, சில நாட்களுக்குள் முடிக்கப்பட்ட பாகங்களை வாடிக்கையாளருக்கு அனுப்பிவிடும்.
இந்த நிறுவனம், சந்தையில் அறிமுகமான 15 நாட்களிலேயே ரூ. 1 கோடி வருவாயை ஈட்டி, சாதனை படைத்துள்ளது. தற்போது இவர்களின் வணிகம் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சரிபாதியாக பிரிந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 400 கோடி முதல் ரூ. 500 கோடி வரை வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளார் தனுஷ்.
உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கை : தனுஷின் இந்த தொழில் புரட்சியில், உலக முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கியமாக, அவரது யோசனையை முதலில் நம்பிய ரேமண்ட் ரஸ்ஸல் என்பவர், ஆரம்பக்கட்ட செயல்பாடுகளுக்கு 20,000 அமெரிக்க டாலர் பணத்தை உடனே அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், புகழ்பெற்ற பாலஜி ஸ்ரீனிவாசன், டைலர் கோவன் போன்ற சர்வதேச ஆட்களும் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதுவரை 150,000 டாலர் நிதியைத் திரட்டியுள்ள இந்த நிறுவனம், விரைவில் 5 மில்லியன் டாலர் (ரூ. 45 கோடி) நிதியை திரட்ட உள்ளது.
தற்போது 2,000 சதுர அடி அளவில் இயங்கிவரும் எக்ஸ் லாஜிக், விரைவில் 70-க்கும் மேற்பட்ட ரோபோக்களுடன் கூடிய, 30,000 சதுர அடி மையமாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. "இன்று யாரும் தொழிற்சாலைகளில் வேலை செய்ய விரும்புவதில்லை. எனவே, இந்தியா தனது உற்பத்தி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றால், ரோபோக்களின் உதவியுடன் முழுமையான தானியங்கிமயமாக்கலை மேற்கொண்டே ஆக வேண்டும்" என்று தனுஷ் உறுதியுடன் கூறுகிறார். இதன் மூலம், கோயம்புத்தூரை இந்தியாவின் ரோபோடிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றுவதே கனவு என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications