சர்வதேச ஸ்டார்ட்அப் சந்தையில் மிகவும் பிரபலமான வங்கியாக விளங்கும் சிலிக்கான் வேலி வங்கி கடந்த வார வெள்ளிக்கிழமை மாலை திவாலாவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவ்வங்கியில் பணத்தை வைத்திருந்த செய்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 1,00,000 ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் என Y Combinator அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சுமார் 10,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் அவர்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இந்நிலையில் சிலிக்கான் வேலி வங்கி திவாலாவதை தொடர்ந்து அச்சிறு வணிக நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு அடுத்த 30 நாட்கள் அதாவது ஒரு மாத சம்பளத்தை கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்மூலம் சுமார் 1 லட்சம் வேலையாட்கள் தங்கள் பணியை இழக்க நேரிடும், ஆகவே அரசு விரைந்து மாற்று முடிவு எடுக்க வேண்டும் என Y Combinator அமெரிக்க அரசுக்கு சமர்பித்த மனுவில் தெரிவித்துள்ளது.
FDIC முயற்சி
FDIC மற்றொரு வங்கியை சிலிக்கான் வேலி வங்கியுடன் இணைக்க முயற்சிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், பாதுகாப்பற்ற முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
37,000 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு சிக்கல்!
NVCA இன் அறிக்கையின்படி, சிலிக்கான் வேலி வங்கியில் 37,000 சிறு வணிகங்கள் 250,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான வைப்புத் தொகைகளைக் கொண்டுள்ளன. FDIC இணையதளத்தின்படி, இந்த நிலுவைகள் இப்போது அவர்களுக்குக் கிடைக்காது எனவும் அதற்கு பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
ஊழியர்கள் பணி இழப்பு!
Y Combinator அமெரிக்க அரசுக்கு சமர்பித்த மனுவில் சிலிக்கான வங்கியில் கணக்கு வைத்துள்ள சுமார் 10,000 ஸ்டார்ட்-அப்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களும் அடங்கலாம். தற்போது வங்கியிலிருந்து பணத்தை மீட்டெடுக்க முடியாமல் போனால் அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக வேலை இழப்பு நிலைக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
3,500 சிஇஓ
மேலும் இந்த மனுவில் 3,500 க்கும் மேற்பட்ட இணை நிறுவனர்கள், CEO, மற்றும் ஸ்டார்ட்-அப் மற்றும் சிறு வணிகங்களின் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதில் PayO, SaveIN மற்றும் SalaryBook போன்ற இந்திய நிறுவனங்களும் அடக்கம்.
அரசு உடனடி நடவடிக்கை
SVB சரிவால் சிறு வணிகங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா பின்னுக்குத் தள்ளப்படும்!
இந்நிலை அப்படியே தொடர்தாலோ அல்லது நடவடிக்கைகளில் தாமதம் எற்பட்டாலோ அமெரிக்க நாட்டின் முன்னேற்றங்களில் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மற்ற நாடுகள் முன்னேறி செல்லக்கூடும் எனவும் Y Combinator மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிக்கான் வேலி வங்கி!
அமெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி வங்கி (SVB) ஸ்டார்ட்அப் மற்றும் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான டெபாசிட் பெறுவதும், நிதியுதவிகளை அளிக்கும் சேவைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
85 சதவீதம் சரிவு
இந்நிலையில் சென்ற வாரம் சிலிக்கான் வேலி வங்கியின் பங்குகள் 85 சதவீதம் சரிந்து, திவாலானதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட துவங்கியுள்ளது.
வங்கிகள் திறப்பு!
சிலிக்கான் வேலி வங்கியின் அலுவலகங்கள் மார்ச் 13 அன்று திறக்கப்படும் என்று FDIC தெரிவித்தது. டெபாசிட் செய்த வங்கி கணக்காளர்களுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். ஆனால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கியின் 175 பில்லியன் டாலர் டெபாசிட்களில் 89% டெபாசிட் தொகைக்கு காப்பீடு கிடைக்காதா காரணத்தால் இந்த தொகையை எடுக்க முடியாது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications