இண்டர்நெட் யுகத்தில் மிகப்பெரிய நிறுவனமாகவும், ஒட்டுமொத்த சர்ச் வர்த்தகத்தையும் கட்டியாண்ட யாஹூ தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்தாலும், தொடர்ந்து ஜப்பான் போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தித் தான் வருகிறது.
யாஹூ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்தாலும் கூகுள், மைக்ரோசாப்ட் ஆகியவை இண்டர்நெட் சேவை உலகில் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் வெற்றி அடையமுடியாமல் தவிக்கிறது.
இதற்கு மத்தியில் ரெசிஷன் அச்சம் டெக் துறையில் அதிகப்படியாக இருக்கும் வேளையில் பெரிய பெரிய நிறுவனங்களே தடுமாற்றும் நிலையில் யாஹூ அடுத்த ஒரு வாரத்தில் மட்டும் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
யாஹூ நிறுவனம்
யாஹூ நிறுவனத்தில் விளம்பர தொழில்நுட்பப் பிரிவில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 20% க்கும் அதிகமானோரை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக Yahoo வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பணிநீக்கம்
இந்தப் பணிநீக்கம் 2023 ஆண்டு இறுதிக்குள் முடிக்க உள்ள நிலையில், தற்போது கிட்டத்தட்ட 50% Yahoo விளம்பர தொழில்நுட்ப ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் இந்த வாரம் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்றும் யாஹூ அறிவித்துள்ளது.
5 பில்லியன் டாலர்
2021 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டாலர் தொகைக்கு யாஹூ நிறுவனத்தைத் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் வாங்கியதால், இதன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இந்தப் பணிநீக்கம் மூலம் யாஹூ நிறுவனத்தின் வர்த்தகக் கவனம் சீராகும்.
விளம்பர வணிகம்
இதைவிட முக்கியமாக யாஹூ நிறுவனத்தின் DSP அதாவது டிமாண்ட் சைட் பிளாட்ஃபார்ம் எனப்படும் அதன் முதன்மையான விளம்பர வணிகத்தில் அதிகக் கவனம் மற்றும் முதலீட்டைச் செய்ய வாய்ப்பு உருவாகும் என யாஹூ தெரிவித்துள்ளது.
முக்கிய வர்த்தகச் சந்தை
யாஹூ நிறுவனத்தின் முக்கிய வர்த்தகச் சந்தையில் பல விளம்பரதாரர்கள் அதிகப்படியான பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாகக் குறைத்த நிலையில் தங்கள் மார்கெட்டிங் பட்ஜெட்-ஐ குறைத்துள்ளது.
ஒரே வழி பணிநீக்கம்
இதனால் யாஹூ நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வருவாய் அளவீட்டில் தொடர்ச்சியான சரிவு அடைந்து வருவதை உணர்ந்து, சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்குப் பதிலளிக்கும் வகையில் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
டெக் ஊழியர்கள் பணிநீக்கம்
கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க் முதல் ஆல்பாபெட் இன்க் வரையில் அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த ஆண்டு அதிகப் பணவீக்கம் மற்றும் உயரும் வட்டி விகிதங்களால் ஏற்பட்ட டிமாண்ட் அளவு பாதிப்பை ஈடுகட்ட இந்தப் பணிநீக்கம் அறிவிக்கப்படுகிறது.
2000 ஊழியர்கள் பாதிப்பு
யாஹூ நிறுவனத்தில் 10000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், இந்தப் பணிநீக்கம் மூலம் குறைந்தது 2000 ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். கூகுள், மைக்ரோசாப்ட் AI Chatbot-க்கு போட்டிப்போட்டு வரும் நிலையில் யாஹூ தனது விளம்பர வர்த்தகத்தைக் காப்பாற்றப் போராடி வருகிறது.
2022 உடன் பணிநீக்கம் முடியும் நினைத்தால், கடந்த ஆண்டை காட்டிலும் 2023ல் அதிக பணிநீக்கம் பதிவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications