மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா மத்தியில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மரணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் பெரும் விவாதத்தை உருவாக்கியது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானவை என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
இதோடு பெஞ்சமின் நெதன்யாகு மகன் Yair Netanyahu திடீரென மாயமானது குறித்த டிவீட்கள் அனல் பறக்கிறது. பெஞ்சமின் நெதன்யாகு மகன் திடீரென சமுக வலைத்தளத்தில் இருந்து மாயமாக என்ன காரணம்..? ஈரான் கட்டுப்பாட்டில் Yair Netanyahu இருக்கிறாரா..? உண்மை என்ன..?

பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் 'போலி செய்தி' என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் நலமாக இருப்பதாகவும், தற்போதைய போர் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வதந்தி சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோவுடன் தொடங்கியது. அந்த வீடியோவில் பிரதமர் நெதன்யாகுவின் கையில் ஆறு விரல்கள் இருப்பது போல தோன்றியதாக சிலர் கூறி, அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றியமைக்கப்பட்ட வீடியோ எனக் கூறி பரப்பினர்.
இதன் பின்னர் அந்த வீடியோ மற்றும் சில புகைபடங்கள் இணையத்தில் வேகமாக பரவியதால், இஸ்ரேல் பிரதமர் தாக்குதலில் காயமடைந்ததாகவும் அல்லது உயிரிழந்ததாகவும் பல்வேறு ஊகங்கள் வெளியானது. ஆனால் பின்னர் அந்த வீடியோவில் காணப்பட்ட காட்சி ஸ்கிரீன்ஷாட் காரணமாக ஏற்பட்ட தவறான தவறான தோற்றம் மட்டுமே என்று விளக்கப்பட்டது.
இந்த வதந்திகள் உருவாக காரணமாக இருந்தது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் ஈரானின் முன்னாள் உயர்ந்த தலைவர் Ali Khamenei உயிரிழந்ததாக வெளியான தகவல்களே எனக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் இஸ்ரேல் பிரதமர் உயிரிழந்திருக்கலாம் என்ற தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.
யாயிர் நெதன்யாகு
இந்த வதந்திகளை வெளியாற மற்றொரு முக்கியமான காரணம் இஸ்ரேல் பிரதமரின் மகன் Yair Netanyahu சமூக ஊடகங்களில் திடீரென அமைதியாகிவிட்டது தான், மக்கள் மத்தியில் சந்தேகத்தை அதிகரித்தது.
யாயிர் நெதன்யாகு பொதுவாக தினமும் 30-25 டிவீட்களை வெளியிடுவார். ஆனால் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பதிவுகள் இல்லாததால், சில சமூக ஊடக பயனர்கள் குடும்பத்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கத் தொடங்கினர்.
யாயிர் நெதன்யாகு அமெரிக்காவில் மியாமி மாகாணத்தில் வசித்து வருகிறார், பல முறை டிரம்ப்-ஐ சந்தித்துள்ளார். மேலும் யாயிர் நெதன்யாகு டிவிட்டரில் அமைதியாக இருக்க பாதுகாப்பு காரணங்களுக்காக இருக்காலம் என்றும், இருவரும் பாதுகாப்பாகவே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்கள்
சமீப காலங்களில் போர் அல்லது அரசியல் பதற்றம் போன்ற சூழ்நிலைகளில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் வேகமாக பரவுவது அதிகரித்து வருகிறது. இந்த சம்பவமும் அதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? – அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

15 நாட்களில் 40% மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை: ஈரான் போர் முடிவது தான் தீர்வா?

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா..! கொந்தளிக்கும் ஈரான்..! 2ஆவது வாரத்தில் ஈரான் போர்..!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

பாகிஸ்தான் மீது சரமாரி தாக்குதல்.. ஆப்கானிஸ்தான் கொடுத்த எதிர்பாராத பதிலடி..!!

இண்டிகோ- எங்களுக்கு வேற வழி தெரியல.. சிஇஓ ராஜினாமா செய்த உடன் கட்டண உயர்வு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!



Click it and Unblock the Notifications


