இந்தியாவின் முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி ஹப் ஆக விளங்கும் சென்னை, உள்நாட்டுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் அதிகளவில் உற்பத்தி செய்கிறது. இதேவேளையில் இந்தியாவிலும் சரி உலக நாடுகளிலும் சரி இரு சக்கர வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்திருக்கும் வேளையில் தமிழ்நாட்டின் மூலம் இந்த டிமாண்ட்-ஐ பூர்த்தி செய்ய முடிவு செய்துள்ளது ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான யமஹா.
இந்திய யமஹா மோட்டார் (IYM) சென்னை அருகே உள்ள தனது தொழிற்சாலையில் இரு சக்கர வாகன உற்பத்தித் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனமான யமஹா அதன் விரிவாக்கத் திட்டத்தின் முன்-சாத்தியக்கூறு அறிக்கையை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது, இதன் மூலம் தேவையான சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெற்று விரிவாக்க பணிகளைத் துவங்க உள்ளது யமஹா.

யமஹா சமர்ப்பித்துள்ள pre-feasibility report-ன் படி, இந்நிறுவனம் சுமார் ரூ.180 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த விரிவாக்கம் மூலம் சுமார் 400க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் தனது உற்பத்தி தளத்தை உத்தரப் பிரதேசத்தின் சுராஜ்பூர் மற்றும் தமிழ்நாட்டின் வல்லம் வடகல் ஆகிய இடங்களில் வைத்துக்கொண்டு இயக்குகிறது. யமஹா நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 15 லட்சம் பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.
சென்னை வல்லம் வடகல் பகுதியில் இருக்கும் யமஹா தொழிற்சாலை சுமார் 111 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் செயல்படத் தொடங்கிய நிலையில், தற்போது விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த விரிவாக்கம் மூலம் யமஹா நிறுவனம் கூடுதலாக மாதத்திற்கு 35,000 பைக்குகள் மற்றும் 45,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் சென்னை தொழிற்சாலை அளவை 1.5 லட்சம் சதுர மீட்டரிலிருந்து 1.7 லட்சம் சதுர மீட்டருக்கு அதிகரிக்கும்.
யமஹா நிறுவனத்திற்குத் தென்னிந்தியா சந்தை, குறிப்பாகச் சென்னை முக்கியமான சந்தையாகும், இந்நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 30 சதவீதத்தைத் தென்னிந்தியா கொண்டுள்ளது. சென்னை தொழிற்சாலையில் மட்டும் சுமார் 4,743 பேர் வேலை பார்த்து வருகின்றனர். தற்போதைய விரிவாக்கம் மூலம் கூடுதலாக 431 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications