இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பையில் சொந்தமாக ஒரு வீட்டினை வாங்கியுள்ளார்.
எந்த மும்பை நகரில் வறுமையில் சிக்கி பானிபூரி விற்று வந்தாரோ அதே மும்பையில், தன்னுடைய கடினமான உழைப்பால் சம்பாதித்த பணத்தை கொண்டு வீடு வாங்கி இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வளர்ச்சி வாழ்க்கையில் போராடும் பலருக்கும் முன் உதாரணம்.

பானிபூரி விற்பனை முதல் கிரிக்கெட் வரை: யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் என்ற பெயர் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. இதற்காக அவர் சிறு வயதில் இருந்தே எதிர்கொண்ட சவால்கள் பல. 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
இவர் 10 வயதாகும் போது எப்படியாவது கிரிக்கெட் வீரராகி நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கனவில் மும்பைக்கு வந்தவர். சிறு சிறு கடைகளில் தங்கி வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.
பகலில் பானிபூரி விற்பது கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்வது, டெண்டில் வசிப்பது என இவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அப்போது சாண்டாகிரசில் கிரிக்கெட் அகாடமி நடத்தி வரும் ஜூவாலா சிங் என்பவர் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் திறனை அறிந்து அவருக்கு பயிற்சி அளித்தார்.
வளர்ந்து வரும் நட்சத்திரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து 2020ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். மூன்று சீசன்களில் விளையாடியுள்ள அவர் 37 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் எட்டு அரைசதங்களுடன் 1172 ரன்கள் குவித்துள்ளார்.
ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டம் காரணமாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே 171 ரன்களை குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து தற்போது வரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் என 861 ரன்கள் குவித்துள்ளார். வினோத் காம்ப்ளி, விராட் கோலி ஆகியோருக்கு பின் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
மும்பையில் வீடு வாங்கிய ஜெய்ஸ்வால்: கிரிக்கெட் உலகில் சாதனை நாயகனாக கால்பதித்திருக்கும் ஜெய்ஸ்வால், பொருளாதார ரீதியாகவும் வெற்றி கண்டு வருகிறார். மும்பை பாந்த்ரா பகுதியில் 5.38 கோடி ரூபாய்க்கு நட்சத்திர வீடு ஒன்றை அவர் சொந்தமாக வாங்கியுள்ளார்.
1,110 சதுர அடி அளவில் இந்த அனைத்து வசதிகளுடனும் இந்த அபார்ட்மெண்ட் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த முறை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications