நடப்பு ஆண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரையில் அதிக லாபம் கொடுத்த சில பங்குகள் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக பங்கு சந்தை என்று பயந்து ஒதுங்கியவர்கள் எல்லாம், இந்தாண்டு லாக்டவுன் காலகட்டத்தில், இதுதான் சரியான நேரம் என பங்கு சந்தையில் நுழைந்தனர்.
பலரும் டீமேட் கணக்கு தொடங்கினர். கடந்த சில மாதங்களாகவே மாதத்திற்கு ஒரு மில்லியன் கணக்குகள் தொடங்கப்பட்டதே இது சிறந்த சாட்சி. அதெல்லாம் சரி இந்த ஆண்டில் நல்ல ஏற்றம் கண்ட பங்குகள் என்னென்ன? அதாவது 52 வார குறைந்தபட்ச விலை என்ன? 52 வார உச்சம் எவ்வளவு? எவ்வளவு ஏற்றம் கண்டது உள்ளிட்ட பல விவரங்களை பார்க்க விருக்கிறோம்.
ருச்சி சோயா பங்கு விலை
அந்த வகையில் இன்று முதலாவதாக பார்க்கவிருப்பது ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். பதஞ்சலி நிறுவனம், ருச்சிய சோயா சமையல் எண்ணெய் நிறுவனத்தினை கடந்த ஆண்டில் தான் 4,350 கோடி ரூபாய் கொடுத்து திவாலான நிலையில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தினை பதஞ்சலி மிக திறமையாக கையாண்டு வருகின்றது. அதுமட்டும் அல்ல நடப்பு ஆண்டில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் நம்புவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
(இந்த தரவுகள் நவம்பர் 26 நிலவரப்படி எடுக்கப்பட்டது)
இதற்கிடையில் இந்த வருடத்தில் இதன் 52 வார உச்சம் 1519.65 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 16.2 ரூபாயாகும். இது கிட்டதட்ட 4,474.07% ஏற்றத்தினை கண்டுள்ளது.
பயோஃபில் கெமிக்கல்ஸ் & பார்மாஸ்யூட்டிக்கல்ஸ் லிமிடெட்
பயோஃபில் கெமிக்கல்ஸ் & பார்மாஸ்யூட்டிக்கல்ஸ் லிமிடெட் ( Biofil chemicals & pharmaceuticals limited ) நிறுவனம் மருத்துவ துறையில் உள்ள ஸ்மால் கேப் நிறுவனமாகும். கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலையானது 3,130.23% ஏற்றம் கண்டுள்ளது. இந்த வருடத்தில் இதன் 52 வார உச்சம் 208.35 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 6.45 ரூபாயாகும். இது தற்போது 709.15 ரூபாயாக உள்ளது. (இந்த தரவுகள் நவம்பர் 26 நிலவரப்படி எடுக்கப்பட்டது)
யூரோ செராமிக்ஸ் லிமிடெட் (Euro Ceramics Limited)
யூரோ செராமிக்ஸ் லிமிடெட் (Euro Ceramics Limited) நிறுவனம், ஒரு ஸ்மால் கேப் நிறுவனமாகும். இது டைல்ஸ், சானிடரிவேர், மார்பிள்ஸ் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், பாத்ரூம், ரியால்டி டிவிசன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றது. இந்த வருடத்தில் இதன் 52 வார உச்சம் 3.15 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 0.15 ரூபாயாகும். (இந்த தரவுகள் நவம்பர் 26 நிலவரப்படி எடுக்கப்பட்டது)
தன்லா சொல்யூசன்ஸ் நிறுவனம் (Tanla solutions limited)
தன்லா சொல்யூசன்ஸ் நிறுவனம் (Tanla solutions limited) ஹைதராபாத்தினை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், கிளவுட் கம்யூனிகேஷன்ஸ் சேவையை வழங்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் சிங்கப்பூர், லண்டன், கொலம்பியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சேவையினை வழங்கி வருகின்றது. இந்த வருடத்தில் இதன் 52 வார உச்சம் 583.5 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 37.1 ரூபாயாகும். (இந்த தரவுகள் நவம்பர் 26 நிலவரப்படி எடுக்கப்பட்டது)
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications