லாபத்தினை அள்ளிக் கொடுத்த பங்குகள்.. 1000% மேலாக லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த ஆண்டு எனலாம். குறிப்பாக நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த ஆண்டு எனலாம்.

குறிப்பாக பிஎஸ்இ-ல் 48 பங்குகள் 1,000% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. (டிசம்பர் 29 நிலவரப்படி)இதே 966 பங்குகள் 100% முதல் 1,000% வரையில் இந்த காலக்கட்டத்தில் ஏற்றம் கண்டுள்ளது.

 Zomato, swiggy, Ola, Uber: ஜனவரி 1 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு.. மக்களுக்குப் பாதிப்பா..!! Zomato, swiggy, Ola, Uber: ஜனவரி 1 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிப்பு.. மக்களுக்குப் பாதிப்பா..!!

இதற்கிடையில் பிஎஸ்இ மிட் கேப் மற்றும் பிஎஸ்இ ஸ்மால்கேப் இன்டெக்ஸ்கள் முறையே 38% மற்றும் 61% ஏற்றம் கண்டுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 21% ஏற்றம் கண்டுள்ளது.

5,300% மேல் ஏற்றம்

5,300% மேல் ஏற்றம்

இந்த பட்டியலில் டாப் கெயினராக இருப்பது டெக்ஸ்டைல் துறையை சேர்ந்த Digjam நிறுவனமாகும். இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் 5,376% அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது கடந்த ஆண்டு டிசம்பரில் 4.10 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, நடப்பு ஆண்டு டிசம்பர் 29 நிலவரப்படி, 224.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு பலமடங்கு அதிகரித்திருக்கும். உண்மையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தியவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.

2,800% மேல் ஏற்றம்

2,800% மேல் ஏற்றம்

இதே ஆதி நாத் டெக்ஸ்டைல்ஸ் - 4,385% ஏற்றத்தினையும், டிடிஐ எண்டர்பிரைசஸ் - 4,137% ஏற்றத்திலும், ரகுவீர் சிந்தெடிக்ஸ் - 3,960% ஏற்றத்திலும், கீதா ரென்யூவபிள் எனர்ஜி - 3,336% ஏற்றத்திலும், ராதே டெவலப்பர் - 3,086% ஏற்றத்திலும், சென்னை ஃபெரஸ் இண்டஸ்ட்ரீஸ் - 2,827% வரையிலும் லாபம் ஈட்டிய பங்குகளாக உள்ளன.

ஃபெர்பார்மன்ஸ்

ஃபெர்பார்மன்ஸ்

ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளின் மதிப்பீடுகள் மிகப்பெரிய அளவிலான பிரீமிய விலையில் உள்ளன. ஆனால் அதேசமயம் லார்ஜ் கேப் ஃபண்டுகள் டிஸ்கவுண்ட் விலையில் உள்ளன. ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகள், லார்ஜ் கேப் பங்குகளை விட ஏற்ற இறக்கத்தினை காணலாம். ஆனால் லார்ஜ் கேப் பங்குகளுக்கு இணையான பெர்பார்மன்ஸினையும் காண முடிகின்றது.

பென்னி ஸ்டாக்கினை குறையுங்கள்

பென்னி ஸ்டாக்கினை குறையுங்கள்

சமீப காலமாக பென்னி பங்குகள் நல்ல லாபம் கொடுத்துக் கொண்டுள்ள நிலையில், இவை சந்தையில் இதுவரையில் நல்ல லாபத்தினை கொடுத்துள்ளன. ஆனால் இனி இது மாறலாம். ஆக பென்னி பங்குகளில் முதலீட்டினை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

1400 - 2000% ஏற்றம்

1400 - 2000% ஏற்றம்

பான் இந்தியா கார்ப்பரேஷன், காஸ்மோ பெரைட்ஸ், வரி ரென்யூவபிள், Kreon Financial Services, லாயிட்ஸ் ஸ்டீல்ஸ், குளோபஸ் பவர் ஜெனரேஷன், ஜி ஆர் எம் ஓவர்சீஸ், டாண்டியா கன்ஸ்ட்ரக்ஷன், சுவாக்கா பிசினஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 1400 - 2000% மேலாக ஏற்றம் கண்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

year end 2021: These stocks were surged over 1,000%

year end 2021: These stocks were surged over 1,000%/லாபத்தினை அள்ளிக் கொடுத்த பங்குகள்.. 1000% மேலாக லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X