கார் வாங்கபோறீங்களா? இது தான் சரியான நேரம்.. ஹூண்டாயின் சூப்பர் ஆஃபர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக இன்றைய கால நடுத்தர மக்களின் மிகப்பெரிய ஆசையே, ஒரு நல்ல சொந்த வீடு, அடுத்தது ஒரு கார். நிம்மதியான வாழ்க்கை.

அந்த வகையில் இது கார் வாங்க சரியான நேரம் தான். உண்மையில் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு ஹூண்டாய் நிறுவனம் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

பொதுவாக ஆண்டு இறுதி என்றால் ஒவ்வொரு வாகன நிறுவனமும் சலுகைகளை வாரி வழங்கும். அப்படி இருக்கையில் ஹூண்டாய் நிறுவனம் தனது சில கார் ரகங்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரையில் சலுகைகளை அறிவித்துள்ளது.

வருட முடிவில் சலுகை

வருட முடிவில் சலுகை

அதிலும் ஹூண்டாயின் கிராண்ட் ஐ10, ஆரா, நியாஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் கொரோனாவால் களையிழந்த வர்த்தகத்தினை மீட்டெடுக்க இந்த நிறுவனம், வரவிருக்கும் விழாக்கால சலுகை மற்றும் வருட முடிவு என பலவற்றை கருத்தில் கொண்டு இந்த சலுகைகளை வழங்கி வருகின்றது.

ஹூண்டாயின் கிராண்ட் ஐ10க்கு என்ன சலுகை?

ஹூண்டாயின் கிராண்ட் ஐ10க்கு என்ன சலுகை?

ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 ரக காருக்கு அதிகபட்சமாக 60,000 ரூபாய் வரையில் சலுகை பெற வாய்ப்புள்ளது. இந்த காரின் விலை - 6.06 - 6.37 லட்சம் ரூபாயாகும். இதே எக்சேஞ்ச் போனஸாக 15,000 ரூபாயும், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் என 5,000 ரூபாயும், கேஸ் பெனிபிட் என 40,000 ரூபாயும், ஆக மொத்தம் 60,000 ரூபாய் வரையிலும் சலுகையினை பெற முடியும். இந்த காரில் பார்க்கிங் கேமரா, 7 இன்ச் டன் ஸ்கீரின் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு என்ன சலுகை?

ஹூண்டாய் சான்ட்ரோவுக்கு என்ன சலுகை?

ஹூண்டாய் சான்ட்ரோ ரக காருக்கு 50,000 ரூபாய் வரையில் தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் கேஸ் பெனிபிட்டாக 20,000 ரூபாயும், எக்சேஞ்ச் போனஸாக 15,000 ரூபாயும், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் என 5,000 ரூபாயும், மொத்தத்தில் 40,000 ரூபாய் வரையில் பெறலாம். இதில் சான்ட்ரோ எர்ரா ரக காருக்கு 40,000 ரூபாய் வரையிலும், சான்ட்ரோவின் மற்ற ரகங்களுக்கு 50,000 ரூபாய் வரையிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் – எவ்வளவு?

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் – எவ்வளவு?

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கும் 60,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கும். இதில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (டர்போ பெட்ரோல்) காருக்கு கேஸ் பெனிபிட்டாக 45,000 ரூபாயும், எக்சேஞ்ச் போனஸாக 10,000 ரூபாயும், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் என 5,000 ரூபாயும், மொத்தத்தில் 60,000 ரூபாய் வரையில் சலுகை பெறலாம். இதே ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸில் மற்ற ரக கார்களுக்கு கேஸ் பெனிபிட்டாக 15,000 ரூபாயும், எக்சேஞ்ச் போனஸாக 10,000 ரூபாயும், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் என 5,000 ரூபாயும், மொத்தத்தில் 30,000 ரூபாய் வரையில் சலுகை பெறலாம்.

ஹூண்டாய் ஆராவுக்கு எவ்வளவு சலுகை?

ஹூண்டாய் ஆராவுக்கு எவ்வளவு சலுகை?

ஹூண்டாய் ஆரா காருக்கும் 70,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கும். இதில் ஹூண்டாய் ஆரா (டர்போ பெட்ரோல்) காருக்கு கேஸ் பெனிபிட்டாக 50,000 ரூபாயும், எக்சேஞ்ச் போனஸாக 15,000 ரூபாயும், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் என 5,000 ரூபாயும், மொத்தத்தில் 70,000 ரூபாய் வரையில் சலுகை பெறலாம். இதே மற்ற ஆரா ரக கார்களுக்கு கேஸ் பெனிபிட்டாக 20,000 ரூபாயும், எக்சேஞ்ச் போனஸாக 15,000 ரூபாயும், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் என 5,000 ரூபாயும், மொத்தத்தில் 40,000 ரூபாய் வரையில் சலுகை பெறலாம்.

ஹூண்டாய் எலான்ட்ராவுக்கு சலுகை?

ஹூண்டாய் எலான்ட்ராவுக்கு சலுகை?

ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு 1,00,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கும். இதில் ஹூண்டாய் எலான்ட்ரா (பெட்ரோல்) காருக்கு கேஸ் பெனிபிட்டாக 70,000 ரூபாயும், எக்சேஞ்ச் போனஸாக 30,000 ரூபாயும், மொத்தத்தில் 1,00,000 ரூபாய் வரையில் சலுகை பெறலாம். இதே ஹூண்டாய் எலான்ட்ரா டீசல் ரக கார்களுக்கு கேஸ் பெனிபிட்டாக எதுவும் இல்லை. இதற்கு எக்சேஞ்ச் போனஸாக 30,000 ரூபாயும் பெறலாம்.

சலுகைகள் எதற்காக?

சலுகைகள் எதற்காக?

முடங்கிப்போன விற்பனையை மீட்டெடுக்கவும் இந்த சலுகைகள் கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சலுகைகள் இந்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம். இது உண்மையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Year end offers: Hyundai cars year end offer details

Year end offers: Hyundai cars year end offer details
Story first published: Friday, December 18, 2020, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X