2021ஆம் ஆண்டு முடியும் வேளையில் அனைத்து நிறுவனங்களும், நிறுவனத் தலைவர்களும் இந்த ஆண்டில் என்ன செய்தோம், அடுத்த ஆண்டு என்ன செய்யப்போகிறோம் என்பதை அறிவித்துள்ளனர்.
இதேபோல் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2021ஆம் ஆண்டில் அறிவித்த முக்கியமான திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு உள்ளது.
கதிசக்தி
இந்திய கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறை திட்டங்களுக்குப் பல அரசு அமைப்புகளிடம் இருந்து ஒப்புதல், அனுமதி, பணிகளைச் செய்ய வேண்டி உள்ளது. இதில் அதிகளவிலான தாமதம் மற்றும் நிலையற்ற தன்மை இருக்கும் நிலையில், அனைத்து துறைகளை ஒரு முனையில் இணைக்கும் விதமாக இந்தக் கதிசக்தி திட்டம் இயங்க உள்ளது.
இந்தக் கதிசக்தி திட்டம் மூலம் அரசு துறை மற்றும் அமைப்பு மத்தியில் இருக்கும் தடைகளை நீக்கப்பட்டு விமானம் முதல் சாலை, கப்பல் என அனைத்துத் துறை உள்கட்டமைப்புத் திட்டங்களை ஒரு முனையில் ஒப்புதல் பெற்றுச் செயல்படுத்த உள்ளது.
வாகன ஸ்கிராம் திட்டம்
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், எரிபொருள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 15 வருடங்களுக்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து முழுமையாக நீக்க உள்ளது மத்திய அரசு.
மேலும் பழைய வாகனங்களை அழிக்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் புதிய வாகனங்களை வாங்கும் போது தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
சாலை கட்டுமானம்
கட்டுமானத்தின் வேகம் 2014-15ல் ஒரு நாளைக்கு 12 கிமீ ஆக இருந்தது, 2020-21ல் ஒரு நாளைக்கு 37 கிமீ ஆக (3 மடங்குக்கும் அதிகமாக) அதிகரித்துள்ளது. 2014-15ல் 4,410 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டது, 2020-21ல் 13,327 கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டன. கடந்த 7 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 91,287 கிமீ (ஏப்ரல் 2014 இல்) இருந்து இப்போது சுமார் 1,41,000 கிமீ ஆக 50% அதிகமாக உயர்ந்துள்ளது.
2021-22 நடப்பு நிதியாண்டில், அமைச்சகம் இதுவரை NHகளில் 5,407 கிமீ (டிசம்பர் 24 வரை) கட்டியுள்ளது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்.
பாரத் சீரியல்
ஒரு வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறும்போது BH குறிக் கொண்ட வாகனத்திற்குப் புதிய பதிவு முத்திரை தேவையில்லை. இந்த வசதியை பாதுகாப்புத் துறை பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு; மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள்; மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தங்கள் அலுவலகங்களைக் கொண்டுள்ள ஊழியர்களுக்குப் பெரிய அளவில் பயன்படும். வாகனப் பதிவுக்கான இந்தத் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வு, போக்குவரத்து வசதியில் முக்கியப் பங்கு வகிக்கும்.
FASTag சாலை
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து டோல் பிளாசாக்களிலும் அனைத்துப் பாதைகளும் 2021 பிப்ரவரி 15-16 நள்ளிரவு முதல் "FASTag lane"ஆக மாற்றச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த மற்றத்தின் மூலம் டிஜிட்டல் கட்டணம் வசூல், காத்திருப்பு நேரம் குறைத்தல், எரிபொருள் செலவைக் குறைத்தல் எனப் பல நன்மைகள் உருவாகியுள்ளதாகச் சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications