பொக்கிஷமாக மாறிய கிரிப்டோகரன்சி.. இதை வாங்கியிருந்த கோடி ரூபாய்க்கு மேல் லாபம்..!

2021ஆம் ஆண்டில் முதலீட்டுச் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்டு வருசமாக அமைந்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கும் தணிந்து வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மீண்டு வரும் வேலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் விலையில் தடுமாற்றம், பணவீக்கம் அதிகரிப்பு, ஒமிக்ரான் தொற்று ஆரம்பம் என எந்த முதலீட்டுச் சந்தையும் நிலையான வர்த்தகத்தை அடைய முடியாமல் தொடர்ந்து அதிகப்படியான மாற்றத்தை எதிர்கொண்டு வந்தது.

ஆனால் பல கிரிப்டோகரன்சியின் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத லாபம் கிடைத்துள்ளது. இப்படி 2021ல் மரண மாஸ்காட்டிய 6 கிரிப்டோகரன்சியைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 கிரிப்டோகரன்சி குறைந்தபட்சம் 10,000 சதவீதம் அதாவது 100 மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது.

 காலா (GALA)

காலா (GALA)

எதிரியம் டோக்கன் ஆக விளங்கும் காலா, பிளாக்செயின் கேமிங் பிளாட்பார்ம் தளமான காலா கேமிங் தளத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இந்தக் காயினைக் கேம் விளையாடுவோர் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் காலா காயினைப் பயன்படுத்த முடியும். இதனால் சந்தையில் தொடர்ந்து முக்கியதும் பெற்று விளங்குகிறது.

இதன் மூலம் 2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் காலா காயின் விலை 0.00112 டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகப்படியாக 0.821 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் காலா காயின் 74436.36 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது 0.4951 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 சி சான்ட்பாக்ஸ் (SAND)

சி சான்ட்பாக்ஸ் (SAND)

சி சான்ட்பாக்ஸ் இதுவும் கேமிங் பிளாட்பார்ம்-ஐ தொடர்புடையது தான்.

2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் சி சான்ட்பாக்ஸ் காயின் விலை 0.36 டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகப்படியாக 8.4 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சி சான்ட்பாக்ஸ் காயின் 2233.33 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது 6.58 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 பாலிகான் (MATIC)

பாலிகான் (MATIC)


எதிரியம் நெட்வொர்கை மல்டி செயின் தளமாக மாற்றவும், நெட்வொர்க் பாதுகாப்புத் தளமாக விளங்குகிறது பாலிகான் நெட்வொர்க்.

2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் பாலிகான் காயின் விலை 0.018 டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகப்படியாக 2.66 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் பாலிகான் காயின் 14677.77 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது 2.54 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 டெரா (LUNA)

டெரா (LUNA)

பிளாக்செயின் பேமெண்ட் நெந்வொர்க்-ல் துணை ஈடாகப் பயன்படும் ஒரு முக்கியக் கிரிப்டோகரன்சி தான் டெரா.

2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் டெரா காயின் விலை 0.647 டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகப்படியாக 98.61 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெரா காயின் 15141.11 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது 96.61 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 சோலானோ (SOL)

சோலானோ (SOL)

கிரிப்டோகரன்சி சந்தையில் எதிரியம் ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகவே வந்த ஒரு கிரிப்டோ தான் சோலானோ.

2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் சோலானோ காயின் விலை 1.611 டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகப்படியாக 257.48 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சோலானோ காயின் 15882.61 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது 191.89 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+